பேஸ்புக்கில் அரட்டை, குளத்தில் மூழ்கி குழந்தை பலி, தாய்க்கு 5 வருட சிறை
பிரித்தானியாவில் தனது பிஞ்சு குழந்தை குளத்தில் மூழ்குவது தெரியாமல் தாய் ஒருவர் பேஸ்புக்கில் அரட்டை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Yorkshire பகுதிக்கு அருகே Beverly என்ற இடத்தில் குடியிருந்து வருபவர் Claire Barnett.
சம்பவத்தன்று தனது 2 வயது குழந்தை Joshua Barnett வீட்டின் அருகாமையில் உள்ள குளத்தின் அருகே நின்று விளையாடிக்கொண்டிருந்த்தாக கூறப்படுகிறது.
Joshua விளையாடிக்கொண்டிருப்பதால், அவர் தாய் Claire தனது மொபைலில் நண்பர்களுடன் அரட்டையடிப்பதும், பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து கொண்டும் இருந்துள்ளார்.
திடீரென தனது குழந்தையை காணவில்லை என தேடிய Claire அப்பகுதி முழுவதும் தேடியுள்ளார்.
பின்னர் குளத்தினுள் சென்று தேடிய அவருக்கு குழந்தை Joshua மயக்க நிலையில் குளத்தினுள் மூழ்கி கிடப்பது தெரிய வந்தது.
உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
Hull Royal மருத்துவமனை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தும் மயக்க நிலையில் நீடித்த குழந்தை Joshua மருத்துவமனையிலே பரிதாபமாக இறந்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், குழந்தை குளத்தினருகே விளையாடும்போது அவர் தாய் பேஸ்புக்கில் கவனம் செலுத்தி இருந்ததை உறுதி செய்தனர்.
இந்நிலையில் குழந்தை மீது போதிய கவனம் செலுத்தாமல் உயிரிழக்க காரணமாக இருந்தது ஆதாரங்களுடன் நிரூபணமானதால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment