Header Ads



ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மக்கள், மதவாதத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் - பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பண்பாடு பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என அந்த நாட்டுப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறினார்.

அந்த நாட்டில், பயங்கரவாதத்தால் கவரப்பட்ட 15 வயதுச் சிறுவனால் காவல் துறைப் பணியாளர் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். 

 இந்தச் சூழலில், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியதாவது:

 ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மக்கள் மதவாதம், பயங்கரவாதத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். இங்குள்ள யாருக்காவது ஆஸ்திரேலியாவின் பண்பாடு பிடிக்காவிட்டால், அவர்கள் நாட்டை விட்டு தாராளமாக வெளியேறலாம்.

 அவர்கள் தொடர்ந்து இங்கேயே தங்கிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.  அவர்களுக்காக பரந்த உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.  மதத்தின் பெயரால் தவறாக வழி நடத்தப்பட்ட 15 வயது சிறுவன், காவல்துறைப் பணியாளரை சுட்டுக் கொன்றுள்ளார். இதுபோன்ற பயங்கரவாதப் போக்கை அனைத்து ஆஸ்திரேலியர்களும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

 பிற இனத்தினர் மீது வெறுப்பு கொள்வதோ, மதவாதத்தில் ஈடுபடுவதோ ஆஸ்திரேலியாவின் அடிப்படைத் தன்மையை அழித்து விடும் என்றார் அவர்.
 காவல்துறையின் நிதிப் பிரிவில் பணியாற்றி வந்த கர்டிஸ் செங் (58) என்பவரை ஃபர்ஹாத் ஜாபர் என்பவர் கடந்த வாரம் சுட்டுக் கொன்றார்.

 அதனைத் தொடர்ந்து ஃபர்ஹாத் ஜாபர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரவாத நோக்கிலேயே ஜாபர் அந்தப் படுகொலையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.   அதனைத் தொடர்ந்து, சிட்னியில் பல்வேறு வீடுகளில் சோதனை நடத்திய போலீஸார், 16 முதல் 22 வயது வரையிலான 4 பேரை புதன்கிழமை கைது செய்தனர். 

1 comment:

  1. இது எல்லா மத மொழி இனத்தவருக்குமான அறிவுறை என நினைக்கிறேன் சொந்த நாட்டில் உயிர் வாழ பயம்,வசதியான வாழ்வு வேலை வாய்ப்பு இப்படி பற்பலகாரணங்களுக்காக பிற நாட்டில் குடியேறி அடைக்கலம்,வாழ்வுதந்த அந்தந்த நாடுகளுக்கு உண்மையானவர்களாக நாம் இருக்கவேண்டும் இல்லை எம்மை நாம் மாற்றமுடியாது எனில் நாம் எமது நாட்டை விட்டு போகக்கூடாது

    ReplyDelete

Powered by Blogger.