'சிரியா மீது ரஷ்யா தாக்குதல்' துருக்கி + சவுதி அரேபியாவின் நிலைப்பாடு யாது..?
சிரியா மீது ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க கூட்டுப்படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் வெளியுறவு விவகார கமிட்டியின் தலைவரான Alexei Pushkov சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார்.
அதில், சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கிறேன் என கூறிவிட்டு அமெரிக்க ஒரு போலியான நாடகத்தை நடத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் ரஷ்யா ராணுவம் ஈடுப்பட்டால், அது ஒரு மிகச்சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என Alexei Pushkov கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ரஷ்யா கடந்த புதன் கிழமை முதன் முதலாக வான்வழி தாக்குதலை தொடங்கியது.
ஆனால், தாக்குதல் நிகழ்ந்த பகுதிகளில் இருந்த வந்த தகவலை தொடர்ந்து, ரஷ்யா ஐ.எஸ் தீவிரவாதிகளை தாக்குவதற்கு பதிலாக சிரியா அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்களையும் பொதுமக்களையும் தாக்கி அழித்து வருவதாக அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா, துருக்கி மற்றும் சவுதி அரேபியா நாடுகள் இன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில், ரஷ்யா தனது இலக்கை தாக்காமல் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் இந்த செயல்பாடுகள் அங்கு நிலவி வரும் போர்க்கால சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்திவிடும்.
எனவே, சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக கைவிட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகளின் உறுப்பினர்கள் ஒரு அவரச ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சிரியா மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Post a Comment