Header Ads



இஸ்லாமியர்கள் காண்டுமிராண்டித்தனமாக செயல்பட அனுமதிக்ககூடாது - ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோர வந்துள்ள கிறித்துவ அகதிகள் மீது, இஸ்லாமிய அகதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்திருப்பதால் இரு மதத்தினரையும் தனி முகாம்களில் தங்க வைக்கும் ஏற்பாடு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனி தேசிய பொலிசார் சங்கத்தின் துணை தலைவரான ஜோர்க் ராடெக் என்பவர் அரசுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார்.

அதில், ஜேர்மனியில் தற்காலிக புலம்பெயர்ந்தவர்களாக மற்றும் அகதிகளாக தங்கியுள்ள கிறித்துவர்கள் மீது இஸ்லாமிய அகதிகள் வன்முறையை பிரயோகிப்பது அதிகரித்து வருகிறது.

இதனை தடுப்பதற்கு இரு மதத்தினரையும் தனித்தனி முகாம்களில் தங்க வைப்பது மட்டுமே சிறந்த வழியாக இருக்கும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜேர்மனியில் வெளியாகும் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், துருங்கியா மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய மற்றும் கிறித்துவ புலம்பெயர்ந்தவர்களை வெவ்வேறு முகாம்களில் தங்க வைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை உறுதி செய்துள்ளது.

இதே பொலிசார் சங்கத்தை சேர்ந்த மற்றொரு பொலிஸ் அதிகாரியான Rainer Wendt கூறுகையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சன்னி இஸ்லாமியர்கள் தங்களது மதக்கோட்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களை பிற மதத்தினரும் பின்பற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

சில நேரங்களில் இது வன்முறையாக மாறி கத்தி அல்லது துப்பாக்கிகளை உட்படுத்தும் கலவரமாகவும் மாறிவிடுகிறது.

மேலும், 750 நபர்களை மட்டுமே தங்க வைக்க கூடிய முகாம்களில் 4,000 நபர்களை தங்க வைப்பதும் வன்முறைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது என்றார்.

இருவரின் கருத்தையும் ஆமோதிப்பது போன்று சர்வதேச மனித உரிமைகள் ஆணையக்குழுவின் அதிகாரியான Max Klingberg ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜேர்மனியில் புகலிடம் கோர வந்துள்ளவர்களில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தீவிரவாதத்துடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவரின் கோரிக்கைகளும் பத்திரிகைகளில் வெளியானதை தொடர்ந்து, புகலிடம் கோர வந்துள்ள இஸ்லாமியர்களில் சிலர் காண்டுமிராண்டித்தனமாக செயல்படுவதை அனுமதிக்க கூடாது.

பொலிசாரின் இந்த கோரிக்கையை அரசு ஏற்று விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. வேலியில் போன ஓனானை பிடித்து மடியில்வைத்தால் இப்படித்தான்

    ReplyDelete

Powered by Blogger.