Header Ads



சியாம்பலகஸ்கொட்டுவ அந்நூர் அரபுக் கல்லூரிக்கு, புதிய மாணவர்கள் அனுமதி

சியாம்பலகஸ்கொட்டுவ அந்நூர் அரபுக் கல்லூரிருக்கு 2016 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை 11-10-2015 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஷரிஆப் பிரிவுக்கும்  மற்றும் குர்ஆன் மனனப் பிரிவுக்கும் நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது.

ஷரிஆப் பிரிவுக்கு 2016 ல் ஜனவரி 31 ஆம் திகதியில் 16 வயதுக்கு மேற்படாதிருத்தல் எட்டாம் ஆண்டு பாடவிதானத்தைத் தொடர்வதற்கான தகுதியுடையோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குர்ஆன் மனனம் இட்டு இருத்தல் வேண்டும்.

குர்ஆன் மனனப் பிரிவுக்கு 2016 இல் ஜனவரி 31 ஆம் திகதியில் 11 வயதுடையவராக இருத்தல் வேண்டும். அல் குர்ஆனை சரளமாக ஓதுதல் வேண்டும். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.