5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை, புள்ளி எல்லையை குறைக்குமாறு கோரிக்கை
5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கான சித்திபெறும் புள்ளி எல்லையை குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரிய சேவைகள் சங்கத்தின் பொது செயலாளர் மகிந்த ஜயசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்காக சித்திபெறும் புள்ளி எல்லை அதிகூடியதாக இருந்தது.
இதனால் இந்த பரீட்சைக்கு தோற்றிய மாணாக்கர்கள் மனரீதியான அழுத்தங்களுக்கு உள்ளானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், மானவர்களின் மனவளத்தை கருத்தில் கொண்டு, இந்த புள்ளி எல்லையை குறைப்பதற்கு கல்விசார் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment