நிலக்கீழ் சொகுசு மாளிகையை, எனக்காக அமைக்கவில்லை - மகிந்தவின் விளக்கம்
ஜெனீவா அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தை தாம் திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாரயன்பிட்ட அபயராமாவில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
அதேநேரம் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள இரகசிய நிலக்கீழ் கட்டிடம் தொடர்பிலும் அவர் இதன் போது விளக்கமளித்திருந்தார்.
இந்த இரகசிய நிலக்கீழ் கட்டிடம் தொடர்பான தகவல்கள் சமுக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன.
எனினும் இது தமக்காக அமைக்கப்பட்டதில்லை என்றும், இது ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
யுத்த காலத்தில் பாதுகாப்பு குழு கூட்டத்தையும், அந்த நிலக்கீழ் கட்டிடத்திலேயே தாம் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடடா! என்ன ஒரு விளக்கம்! எல்லாரும் உடனே நம்பிட்டாய்ங்கய்யா.. நம்பிட்டாய்ங்க!
ReplyDeleteThat's ok during war time but after the war why your son's used this place to run there private tv channel ?
ReplyDeleteNallaave nadikkuraippa nadikkura,innum niraya unduppa thonduraththukku waituppa
ReplyDelete