மூவருக்கு மரண தண்டனை
காணி பிரச்சினை காரணமாக நபர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தின் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் உட்பட மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை உயர்நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்தவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அக்குரஸ்ஸ, கெஹேல்வத்தை பிரதேசத்தில் 2008ஆம் ஆண்டு ஜுலை மாதம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது 36 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment