"இனவாத சிந்தனையின் நகர்வு" சாய்ந்தமருதிலிருந்து, அம்பாறைக்கு செல்லவுள்ள அலுவலகம்
(இப்னு ஷெரீப்)
இனவாத சிந்தனையின் மற்றுமொரு நகர்வாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தை சாய்ந்தமருதிலிருந்து அம்பாறை நகருக்கு இடம் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீசின் முயற்சியின் பயனாக முன்னாள் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் கடந்த 2011 ஏப்ரல் மாதம் சாய்ந்தமருது கடற்கரை வீதியிலுள்ள இளைஞர் பயிற்சி நிலையத்தில் திறந்து வைக்கப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் ஓரிரு சிங்கள உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட நலன்களைக் கருத்திற்கொண்டு மீண்டும் அம்பாறை நகருக்கு இடம் மாற்றுவதற்கு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளால் பணிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் சில தினங்களில் இவ்வலுவலகத்தை அங்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலுமுள்ள இளைஞர் யுவதிகளின் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு சாய்ந்தமருதுவில் திறந்து வைக்கப்பட்ட இப் பிராந்திய அலுவலகத்தின் மூலமாக பல்வேறு சேவைகள் ஆற்றப்பட்டுவரும் இந்நிலையில் இவ்வலுவலகத்தில் கடமையாற்றும் ஓரிரு சிங்கள உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க உடன் செயற்படும் வகையில் அம்பாறை நகருக்கு இவ்வலுவலகத்தை இடம் மாற்றுவதற்கு அதன் உயர் அதிகாரிகளால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இவ் இடமாற்ற உத்தரவை ரத்துச் செய்வதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது பேதங்களை மறந்து உடன் செயற்படுவதற்கு முன்வருவார்களா என தமிழ்பேசும் இளைஞர் சமூகம் அவசரமாக வேண்டிநிற்கின்றது.

Post a Comment