ஜே.ஆர். ஜெயவர்தனவிற்கு பின்னர், பனாகொடை இராணுவத் தலைமையகத்திற்கு சென்ற மைத்திரி
சர்வதேச குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் போது முப்படையினரின் கௌரவம் மற்றும் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (26) தெரிவித்துள்ளார்.
முப்படையினர் உட்பட பாதுகாப்பு தரப்பினரை வலுவிழக்கச் செய்ய எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பனாகொட காலால் படை இராணுவ தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவிற்கு பின்னர் பனாகொடை இலங்கை காலால் இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அரச தலைவர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.
இராணுவத் தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பனாகொடையிலுள்ள இலங்கை இராணுவத் தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 80 அடி உயரமான ரனவிரு நினைவுத் தூபியை ஜனாதிபதி திறந்துவைத்தார்.
1900ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கை இராணுவத்தில் சேவையில் இருந்தபோது உயிரிழந்த உறுப்பினர்கள் 3868 பேரின் பெயர்கள் இந்த நினைவுத் தூபியில் பதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment