காவிகளின் கவனத்திற்கு...! கிணற்றுக்குள் குதித்து பசுவை காப்பாற்றிய, இஸ்லாமிய இளைஞர்
கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுவை இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கிணற்றுக்குள் பாய்ந்து மீட்டார். லக்னோவை சேர்ந்த 20 வயது இளைஞர் முகமது சகி, நேற்று இவர் வசிக்கும் பகுதியில் 35 அடி ஆழ கிணற்றுக்குள் பசு ஒன்று விழுந்துள்ளது. இதனால் கிணற்றை சுற்றி மக்கள் கூட்டம் கூடியது. ஆனால் யாரும் பசுவை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. சிலர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அந்த சமயத்தில் மசூதி ஒன்றில் மதிய நேர தொழுகையை முடித்துக் கொண்டு, அந்த பகுதிக்கு வந்த முகமது சகி, கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்த பசுவை கண்டார். உடனடியாக கிணற்றுக்குள் குதித்து பசுவை மீட்க முயற்சித்தார். மீட்கும் முயற்சியின் போது, பசு, அவரை வயிற்றில் எட்டி உதைத்துள்ளது. இதில் முகமது சகிக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. எனினும் அவர் பசுவின் உடலை சுற்றி கயிற்றினை கட்டினார். பின்னர் கிரேன் கொண்டு வரப்பட்டு முகமது சகியும், பசுவும் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டனர்.
கிணற்றுக்குள் விழுந்த பசுவை காப்பற்றிய இளைஞர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். கிணற்றில் விழுந்த பசுவை காப்பாற்றிய முஸ்லிம் இளைஞருக்கு லக்னோ மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் பாராட்டு தெரிவித்துள்ளார். முகமது சகியின் செயல் சமூக நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டு என்று ஆட்சியர் ராஜேசேகர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதாபிமானம் மற்றும் உயிராபிமானத்துக்கு மதம், குலம், இனபேதம் எல்லாம் கிடையாது. நல்ல உள்ளம் இருந்தாலே போதும்!
ReplyDeleteமனிதாபிமானத்தை உங்களுக்கு கற்றுக்கொடுத்தது எது?
ReplyDeleteஉங்களுக்கு இலக்கிய அறிவு இருந்தாலும் இஸ்லாமிய அறிவோ அல்லது சுய அறிவோ கம்மிதான்.
ஆதம் (அலை) க்கு எது/யார் நன்மை , தீமைகளை சொல்லிக்கொடுத்தது?
இசை, இலக்கியங்களை இழுத்தெறிந்து விட்டு இஸ்லாத்தை முறையாக தெரிந்து கொள்ளப்பாருங்கள்.
Even if you don't follow that's your own problem but at least you will know about Islam and aboid commenting irresponsibily and incorrigibly.