ஈரான் தேசிய பெண்கள் கால்பந்து, அணியில் 8 ஆண்கள் -
ஈரான் தேசிய பெண்கள் கால்பந்து அணியில் 8 ஆண்கள் விளையாடி வரும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு ஜோர்தான் தலைநகர் அம் மானில் நடைபெற்ற மேற்காசிய சாம்பியன்'pப் போட்டி யில் ஈரான் அணி 2ஆவது இடத்தை பிடித்தது.
இந்நிலையில் அந்த அணியில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள காத்திருக்கும் 8 ஆண்கள் அறுவை சிகிச்சைக்கு முன்னதாகவே பெண்கள் அணியில் விளை யாடியது தெரிய வந்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு ஈரான் பெண்கள் கால்பந்து அணியில் 4 ஆண்கள் இருப்பதும் தெரியவந்தது. இதனை யடுத்து அவர்கள் அனைவரும் அணியில் நீக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பெண்கள் கால்பந்து அணியில் உள்ள அனைவருக்கும் பாலின சோதனை நடத்த ஈரான் அரசு அதிரடியாக உத்தரவிட்டது.
இதன்படி கடந்த புதன்கிழமை நடந்த பாலின சோத னையிலேயே 8 ஆண்கள், பெண்கள் கால்பந்து அணி யில் இருந்தது தெரிய வந்துள்ளது.
ஈரானில் ஆண்கள் கால்பந்து விளையாடும் போட்டி யைப் பார்க்கவே பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள் ளது. இந்த நிலையில் ஈரான் பெண்கள் கால்பந்து அணியிலே ஆண்கள் விளையாடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment