ஆசிய மனித உரிமைகள் பேரவை அழைப்பு - முஜிபுர் ரஹ்மான் ஹொங்கொங் பயணம்
பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கியதேசியக் கட்சி பிரதான அமைப்பாளருமான முஜிபு ரஹ்மான் ஹொங்கொங் நாட்டுக்கான மூன்றுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை பயணமாகவுள்ளார்.
ஆசிய மனித உரிமைகள் பேரவையின் அழைப்பின்பேரிலேயே அவர் இவ்விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். 'பொலிஸ் கைது மற்றும் அதற்கு பின்னரான மோசமான நிலைமைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்' குறித்து ஆராயும் ஆசிய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மூன்றுநாள் கருத்தரங்கு ஹொங்கொங் கவ்லூன் நகரில் இடம்பெறவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை ஹொங்கொங் செல்லும் முஜிபுர் ரஹ்மான் எதிர்வரும் 8 ஆம் திகதி நாடு திரும்புவார் என அவரின் பிரத்தியேகச் செயலாளர் தெரிவித்தார்.

Post a Comment