Header Ads



அம்பாரை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு, பைஸால் காசீம் விஜயம்


(எம்.எம்.ஜபீர்)

அம்பாரை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு இன்று   சனிக்கிழமை  சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் எம்.சீ.பைஸால் காசீம், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருடன் அபிவிருத்தி செய்யும் பொருட்டு விஜயம் மேற்கொண்டு வருகின்றார்.

இதன் அடிப்படையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் எம்.சீ.பைஸால் காசீம், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருடன்  இன்று நேரில் வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

இதன்போது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு, நோயாளர் விடுதி, சத்திர சிகிச்சைக் கூடம், மருந்து களஞ்சியசாலை, வெளி நோயாளர் பிரிவு என்பவற்றை பார்வையிட்டதுடன் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வை.வீ.எம்.ஏ.அஸீஸிடம் அங்கு நிலவும் குறைபாடுகள் மற்றும் துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

இவ்விஜயத்தின் போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பீ.ஜீ.மஹிபால உள்ளிட்ட சுகாதாரதுறை உயர் அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.



No comments

Powered by Blogger.