மகன் பரீட்சையில் சித்தி - வெற்றியை தாய்க்கு சமர்ப்பணம் செய்யும், தந்தையின் வாக்குமூலம் இது..!
இன்று வெளியாகிய 5ம் ஆண்டுக்கான Scholarship exam results சின் அடிப்படையில் என் மகன் இமான் அவர்களும் சித்தியடைந்துள்ளார் அல்ஹம்துலில்லஹ்.
இப்பரிட்சை தொடர்பாக என் மனப்பதிவை இங்கு பதிவிட விரும்புகின்றேன்...
விளையாடத் துடிக்கும் சிறு வயதில் தலைமேல் புத்தகச் சுமையை அடுக்கி படிப்புச் சிறையிலடக்கி படிப்பூட்டும் இந்த பரிட்சை முறையில் எனக்கு பெரும் முரண்பாடுண்டு.
கடின உழைப்பில் கரை தொட்ட என் மகனின் வெற்றியை நினைத்து களிப்புறுவதா, அல்லது வாழத் தொடங்குமுன் தோக்கத் தொடங்கிவிட்டோமே என்று மனம் துவண்டுபோய் கிடக்கும் கரைசேராப் பாலகர்களை நினைத்து கவலையுறுவதா ?
தோல்வியின் பின் பேசினால் தோற்றவனின் பேச்சு என்று சொல்லி என் மூச்சை இந்த சமூகம் அடக்க முயற்சிக்கும். இப்போது உரக்கப் பேசும் தகுதி எனக்குண்டு. வெற்றிக்காக கடுமையாக உழைத்த எனது மகனும் அவன் தாயும் பட்ட வேதனைகள் வலிகள் உணரக் கிடைத்ததால், இதில் தோல்வி கண்டவர்களின் உணர்வுகளை சுவாசிக் கிடைத்ததால் சொல்கின்றேன் இந்த பரிட்சை முறையில் மாற்றம் வேண்டும்.
ரசித்துப் படிக்கத் தூண்ட வேண்டிய வயதில் இழுத்துப் பிடித்து வலுக்கட்டாயமாக படிப்பு திணிக்கப்படுகிறது. இது பெற்றோரின் பெறுமைக்காக பிஞ்சுகளை போர்க்களத்து அனுப்ப பயிற்சி கொடுக்கும் ஒரு முயற்ச்சி. இது பிஞ்சுகளின் மனதில் படிப்பின் மீது நஞ்சு வார்க்கும் ஒரு முயற்சி. எனவே இந்த பரிட்சை முறையில் மாற்றம் வேண்டும்.
இது பற்றி காலங்காலமாக பலர் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் ஆனால் மாற்றம் மட்டும் மாறாமல் இருக்கின்றது. தற்போதைய புதிய அரசு இதில் மாற்றம் கொண்டுவருவது பற்றிப் பேசுகிறது. எனவே இது மாற்றத்துக்கான நேரம் கனிந்துவரும் காலம் என்பதால், கற்றறிந்தோர், சிறுவர் உளவியல் படித்த பெருமக்கள், அரசியல்வாதிகள் அனைவரும் இதில் மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என வினயமாக வேண்டுகின்றென். அதற்க்கான உங்கள் வாய்கள், பேனாக்கள், படிப்புக்கள், பதவி பட்டங்கள் எல்லாமே பேசட்டும்.
இது சிறுவர்களுக்கான ஒரு சுதந்திரப் போராட்டம். அவர்களின் எதிர்காலம் பாழாகி விடக்கூடாது என்பதற்கான ஒரு மன்றாட்டம்.
சிலர் மட்டுமே வெல்ல வைக்கப்பட வேண்டும் என்பதால் பலர் தோற்றார்கள். பலர் தோற்ற்தால் சிலர் வெண்றார்கள். மொத்தத்தில் இதுதான் இந்த உலகத்துப் பரிட்சைகளின் பொதுவான போக்கு.
அடுத்து.
கடின உழைப்பையும் அதன் மூலம் அல்லாஹ் அருளிய வெற்றியையும் பாறாட்டாமல் இருப்பது நன்றன்று என்பதால் 5ம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் தன் புலமையை வெளிப்படுத்தி எல்லைக்கோட்டைக் கடந்து வெற்றி இலக்கைப் பெற்ற அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள். அல்லாஹ் இன்னும் ஈருலக வெற்றியின் வழியை இவர்களுக்கும் இவர்களோடு பரிட்சைக் களம் கண்ட அனைவருக்கும் வழங்கி வேண்டும் எனப்பிராத்திக்கின்றேன்.
வெற்றியின் பின்புலத்தில் நின்று கடுமையாய் உழைத்த பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டுதலுடன் நன்றியுடன் நினைக்கப்பட வேண்டியவர்கள்.
கடைசியாக மீண்டும் என் மகனை நோக்கி வருகின்றேன்.
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக. ஒரு தந்தை என்ற வகையில் மிகவும் சந்தோஷம் அடையும் தருணங்களில் இதுவும் ஒன்று.
உலகத்துக்கே சத்தியமார்க்கத்தை கொண்டு சேர்க்கும் பல்மொழிவளம் உள்ள சிறந்த தாயியாக அவர் வர வேண்டும், அவருக்கு அல்லாஹ் அருள் புரியவேண்டும் என்பதே என் அனுதினப் பிராத்தனை.
மகன் இமானின் வெற்றி அவரின் தாய்க்கு சமர்ப்பணம்.
அபூ இமான்
இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி

Masha Allah Congrats Imaan ! heart touching words from Abu Imaan .
ReplyDeletejazakumullahu khaira.
Yes i also agree with this statement
ReplyDeletegood article by abo Iman...hope his words reach the relevant authorities in Educational Sector in Sri Lanka
ReplyDeleteExcellent article
ReplyDeleteAllahu akbar
ReplyDelete