Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கும், கவனத்தை ஈர்க்கும் செயலமர்வும்..!

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள அரசியல் முக்கியஸ்தர்களும், ஆய்வாளர்களும் கலந்து கொள்ளும்உரையாற்றவள்ள  கருத்தரங்கும், கவனத்தை ஈர்;க்கும் செயலமர்வும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு 07, ரோயல் கல்லூரிக்கு அருகில் ரீட் அவனியூ (பிலிப் குணவர்தன மாவத்த)யில் 9ஆம் இலக்கதில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில்   நடைபெறவுள்ளது. முன்னர் வெளியான செய்தியில் குறிப்பிப்பட்டிருந்த நிகழ்விடம் மாற்றப்பட்டுள்ளது.  

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ஹக்கீமின் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர 'வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கான அர்த்தபுஷ்டியுடனான நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றை உத்தரவாதப்படுத்துதல்' என்ற தலைப்பிலும், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் 'அர்த்தமுள்ள மீள்குடியேற்றம் பற்றிய அரச கொள்கையும் அதன் பிரதிபலனும்' என்ற தலைப்பிலும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் 'நல்லிணக்கம், வடபுல முஸ்லிம்களின் மீள் வருகை மற்றும் மீள்குடியேற்றம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பார்வை' என்ற தலைப்பிலும்  உரையாற்றுவதோடு,  துறைசார் நிபுணர்களும், வளவாளர்களும் ஆய்வுரைகள் நிகழ்த்துவர். பரஸ்பரம் கருத்தப்பரிமாற்றங்களும் இடம்பெறும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் தொகுப்புரை வழங்குவார்.  

முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹஸன் அலி நன்றி உரை ஆற்றுவார்.

எஸ்.எம்.ஏ. நியாஸ்
தலைவர்
ஏற்பாட்டுக் குழு

2 comments:

  1. I thank to SLMC leader for this meaningful panel discussion. It will workout on the resettlement of the Muslim community insa allah

    ReplyDelete
  2. At what time this event will be held? There is no time.

    ReplyDelete

Powered by Blogger.