Header Ads



எமக்கு துப்பாக்கிகள் வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

சுழல் துப்பாக்கிகளுக்கு பதில் கைத்துப்பாக்கிகளை வழங்குமாறு 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள், நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

இதில் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

சுழல் துப்பாக்கிகள் கால முதிர்ச்சியடைந்துள்ளமை காரணமாக தமக்கு 9எம்.எம் துப்பாக்கிகளை வழங்குமாறு அவர்களின் கோரிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு களுத்துறை விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் இன்றும் நாளையும் துப்பாக்கி பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.