Header Ads



எனக்கு தனி அறை வேண்டும் - அடம்பிடிக்கும் மஹிந்த ராஜபக்ச

நாடாளுமன்றத்தில் தனக்கு தனியான அலுவலக அறை ஒன்றை ஒதுக்கி தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த போதே இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் தனியான அறைகள் ஒதுக்கப்படும் சம்பிரதாயம் இல்லை என அதிகாரிகள் அவருக்கு தெரியப்படுத்தினர். எனினும் தான் முன்னாள் ஜனாதிபதி என்பதால், தனது நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் அலுவலக அறையொன்று ஒதுக்கப்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ச வாதிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகியோருக்கு தவிர எதிர்க்கட்சியின் அங்கம் வகிக்கும் எவருக்கும் நாடாளுமன்றத்தில் அலுவலக அறைகள் ஒதுக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் தற்போது சாதாரணமான நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே.

நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவே மஹிந்த தனியான அலுவலகம் ஒன்றை கோருகிறார் எனவும் அந்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

8 comments:

  1. நீர் ஜனாதிபதியாக இருந்து ஓய்வுபெற்று வீட்டில் இருத்து இருந்தால் பாராளுமன்றதில் தனி அறை என்ன,உனக்காக உன் தனி சிலையே வைத்திருப்போம்.உமது பேராசையால் எல்லாமே இலத்ந்துதான் மிச்சம்

    ReplyDelete
  2. அவர் முன்னாள் ஜனாதிபதியாக பாராளுமன்றம் செல்வதில்லை குருநாகல் மாவட்ட சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகத்தான் போகிறார்.விட்டால் அடம் பிடித்து எல்லாவற்றையும் சாதித்து விடுவாற்போல் உள்ளது.விசாரணைக்கு வீட்டுக்கு போகவேண்டும்.முன்னாள் ஜனாதிபதி என்றால் முன்னாள் ஜனாதிபதி போன்று இருக்க வேண்டும்.நாட்டில் உள்ள எல்லா பதவியும் எனக்கு வேண்டும் என்றால்,பதவிக்கு தகுந்த இடத்தில்தான் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. அடடா!
    இப்போதுதான் பா.உ வேறு முன்னாள் ஜனாதிபதி எனும் சலுகை வேறு தெரிகின்றதோ தாத்தாவுக்கு..?

    ReplyDelete
  4. மின்சார கதிரையை சாருக்கு மெத்தையாக்கி கொடுத்தவர்கலிடம் இன்னும் எதைத்தான் கேட்கமாட்டார் கேட்டும் கொடுக்காமல் யார்தான் இருப்பார்

    ReplyDelete
  5. அமைதி அமைதி வீட்டிலே தனி அறையில் இருக்கலாம் நிம்மதியும் கூட

    ReplyDelete
  6. Gedara gitiyanam denda. Tibuna.

    ReplyDelete
  7. ha...ha....ha.....hee.heeeeee....

    ReplyDelete
  8. To Brother Mini Minhaj....

    Your writting says that " KEEPING SEPARATE STUTURE" for Mahinda....." May political view.. But for a Muslim this is related to SHIRK.

    So as a brother... I adivice you and others to take care of their writings without leading to the way of ACTS of SHIRK.

    May Allah guide us in the path of SALAF us SALEHEENS

    ReplyDelete

Powered by Blogger.