வெலே சுதாவுடன் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட 17 அதிகாரிகள் இடைநீக்கம்
பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கருதப்பட்டு கைதுசெய்யப்பட்ட வெலே சுதாவுடன் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 17 சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமாரவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஒழுக்காற்று விசாரணைகளில் 17 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக, ரோஹன புஸ்பகுமார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment