கொழும்பில் புதிய போக்குவரத்து முறைமை
பாராளுமன்ற வீதி மற்றும் மஹரகம நகரப் பகுதிகளில் ஏற்படும் அதிக வாகன நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்கு விஷேட போக்குவரத்து முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி பாராளுமன்ற வீதியின் வெலிக்கடை சந்தியில் இருந்து ஹோர்டன் சுற்றுவட்டம் வரையான பகுதி காலை 7.30 முதல் காலை 8.45 மணி வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த போக்குவரத்து முறையின் ஒத்திகை நடவடிக்கை வரும் சனிக்கிழமை முற்பகல் 10.30 முதல் 11.30 மணி வரையும் ஞாயிற்றுக் கிழமை காலை 7.30 முதல் 8.45 மணி வரையும் இடம்பெறவுள்ளது.
ஹோமாகமவில் இருந்து கொழும்பு நோக்க செல்வதற்கு காணப்பட்ட 04 ஒருவழிப்பாதைகளை மூன்றாக குறைத்து 01 ஒருவழிப் பாதையை கொழும்பில் இருந்து ஹோமாகம நோக்கி செல்வதற்கு ஒதுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹரகம போக்குவரத்து முறையின் ஒத்திகை நடவடிக்கை வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 முதல் 10மணி வரையும் திங்கட்கிழமை பகல் 1.00 மணி முதல் இரவு 8.30 மணிவரையும் இடம்பெறவுள்ளது.
இவை தவிர மேலும் பல மாற்றங்களுடன் புதிய போக்குவரத்து முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment