அட்டகாசம் புரிந்த 4 தொன் எடையுடைய, காட்டுயானை பிடிபட்டது (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்துவந்த யானையை போரதீவுப்பற்று வேத்துச்சேனை கம்பி ஆறு பிரதேசத்தில் வைத்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று (10) சனிக்கிழமை காலை பிடித்துள்ளனர்.
3 நாட்களாக இப்பிரதேசத்தில் தங்கி இருந்த அதிகாரிகள் மேற் கொண்ட நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இந்த காட்டு யானை பிடிபட்டது.
மேற்படி யானை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கிராம வாசிகளை கொன்றதுடன், அச்சுறுத்தி வந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த யானை 40 வயதுடையது எனவும் 4 தொன் எடையுடையது எனவும்,வைத்தியர் நிகால் தெரிவித்தார்.
இக் காட்டு யானை மருத்துவ சிகிச்சைகளின் பின்பு ஹொறவப்பொத்தானை யானைகள் சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.



Post a Comment