Header Ads



புறா திருடிய சிறுவன், அடித்துக்கொலை

ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனாபேட் மாவட்டத்தில் அமைந்துள்ள கோஹானா கிராமத்தில் 14 வயதே ஆன ஒரு தலித் சிறுவன் புறா திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மேல் சாதி காவல்துறை கயவர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளான். கோவிந்த் என்ற இந்த சிறுவனை அடித்து கொன்று பிறகு தூக்கில் ஏற்றியுள்ளது காவல்துறை. 

புறா திருடியதாக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு அங்கு கோவிந்த் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். அவனை மீட்க அவனது தாய் காவல் நிலையம் சென்றபோது லஞ்சம் கேட்டுள்ளது காவல்துறை. கேட்ட பணத்தையும் கொண்டு வந்துள்ளார் கோவிந்தின் தாய். ஆனால் 'எங்கள் காவலில் இருந்து தப்பி விட்டான்' என்று காவல் துறை சொல்லியுள்ளது. ஒரு சிறுவன் போலீஸ் காவலில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்? அவனை அடித்து கொன்று விட்டு நாடகமாடுகிறது காவல் துறை. 

மாட்டுக் கறியை புனிதமாக்கி அதனை சாப்பிடுபவர்களை எல்லாம் எதிரிகளாக்கினர் இந்துத்வவாதிகள். அதன் பலனை இன்று அனுபவித்து வருகிறது நமது நாடு. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இரண்டு தலித் பிஞ்சுகளை உயிரோடு கொளுத்தினர் இந்துத்வாவாதிகள். நேற்று கோவிந்த் என்ற இளைஞன் அடித்து கொல்லப்பட்டுள்ளான். 

அன்றே இந்தத்வாவாதிகளை இந்துக்கள் கடுமையாக தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இனியாவது நடுநிiலை இந்துக்கள் இந்துத்வாவாதிகளுக்கு எதிராக கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும். அதற்கு இஸ்லாமியர்களும் கிருத்தவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இனியும் தாமதித்தால் நமது இந்தியாவை இந்த இந்துத்வாவாதிகள் சோமாலியா ரேஞ்சுக்கு கொண்டு சென்று விடுவார்கள்.

தகவல் உதவி
NDTV
சுவனப் பிரியன் at 2:04 PM

7 comments:

  1. மோடி என்னும் கொலைகாரனை பிரதமர் ஆக்கியதன் பலனை இந்தியா அனுபவிக்கின்றது.

    மதங்கள் மிருகங்களை மனிதன் அககுகின்றனவா, மனிதனை மிருகம் ஆக்குகின்றனவா? வரலாற்றின் சாட்சிகள் போதும், மதங்கள் மனித குலத்திற்கு இழைத்த தீங்குகளை அறிந்துகொள்ள.

    ReplyDelete
  2. முடிவு ஆரம்பம்

    ReplyDelete
  3. இஸ்லாம் திருட்டுக்கு சொல்லும் சட்டத்தை நடைமுறை செய்து இருந்தால் இத்ன்ஹமாதிரி நடத்து இருக்காது. திருடினால் கையை வெட்டுவதே இஸ்லாமிய சட்டம், கொலை செய்யவோ, அடிக்கவோ அல்லாஹ்வின் வேதம் நமக்குக் கற்றுத்தரவில்லை. மனிதனின் சட்டத்தில் உள்ள ஓட்டைகள், மனிதனுக்கு கேட்டையே ஏற்படுத்தித் தரும்.

    ReplyDelete
  4. இது வன்மையாக கன்டிக்கப்படவேண்டியது

    ReplyDelete
  5. Anvar அவர்களுக்கு நான் வழங்கிய பதில் பிரசுரமாகவில்லை.

    வெறும் 14 வயது சிறுவன் புறா திருடியதற்காக கையை வெட்டச் சொல்வது கொடூரம். வெட்டினால் மீண்டும் வளர்வதற்கு கை ஒன்றும் தலைமுடி அல்ல.

    ReplyDelete
  6. Nilavan Markes! Anwar Ali doesn't represent Islam. There are many preconditions before cutting a thiefs hand.
    So don't think if you steal Islam will cut your hand straight away.
    Eg. If he stole because of hunger then the entire people in their to be blamed.
    That's why Islam has zaqath.
    There are plenty things which are not straight and simple like people portray. You need to learn deep then you will know why Islam has such laws and how you can implement such laws.

    ReplyDelete
  7. எனது பதில் மீண்டும் பிரசுரமாகவில்லை.

    எனது பதிலகளை மறைத்து இஸ்லாத்தை பாதுகாத்து தர வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் அல்லாஹ் இருக்கின்றார் என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.