Header Ads



வீதிகளில் தொழுகை நடத்துவதை, ஆக்கிரமிப்பு என்றவருக்கு சிக்கல்..!

பிரான்சின் தேசிய முன்னணி தலைவர் ஒருவர் இஸ்லாமியர்களை நாஜிக்களுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரான்சின் தேசிய முன்னணி கட்சி தலைவரான Marine Le Pen என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு தங்களது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வந்துள்ளார்.

அப்போது பிரான்சின் முக்கிய வீதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதை கண்ட அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்திருந்தார்.

பொதுக்கூட்டமொன்றில் பேசிய அவர், இரண்டாம் உலகப்போர் குறித்து பேசும் பலர், நாடுகளின் ஆக்கிரமிப்பு குறித்தும் பேசுவார்கள் எனில்,

தெரு வீதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதும் ஒருவகையில் ஆக்கிரமிப்பே என்றார்.

மேலும், மதம் சம்பந்தமான சட்டங்கள் அமலில் இருக்கும்போது, ஆயுதங்களோ, ராணுவமோ இன்றி ஆக்கிரமிப்பு நடத்துவது நாஜிக்களை போன்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் பிரான்ஸ் முழுவதும் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட அரசு கூடுதல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வழக்கை கிடப்பில் போட்டது.

இதனிடையே குறிப்பிட்ட அமைப்பு ஒன்று அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி கடந்த 2012-ம் ஆண்டு மனுவளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், Le Pen வன்முறையை தூண்டும் வண்ணம் பாகுபாடுடன் பேசியதாக குற்றம்ச்சாட்டியது.

தண்டனை உறுதி செய்யப்பட்டல் அவருக்கு ஓராண்டு சிறை அல்லது 45 ஆயிரம் யூரோ அபராதமாக விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

19 comments:

  1. வீதியில் தொழுகை நடாத்துவதிலுள்ள சரி பிழைகளுக்கு அப்பால்...இதற்காக அந்த நாட்டு அரசின், பிறமதங்கள் பிற சமூகத்தினர் மீதான சகிப்புத்தன்மையைத்தான் போற்ற வேண்டும்.

    இதேபோல நமது இஸ்லாமிய நாடுகளில் பௌத்தர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் வீதியில் ஆராதனை நடாத்தியிருந்தால் அதை அங்குள்ள ஒரு பிரஜை கண்டித்துப் பேசியிருந்தால் அந்த அரசு எதைச் செய்திருக்கும்..?

    ReplyDelete
  2. பிரான்சின் பிற மதங்கள், பிற சமூகத்தினரின் சகிப்புத்தன்மை என்பதையும் தாண்டி .......எந்தவொரு நாட்டிற்குள் நுழையும்போதும் அந்த நாட்டின் இறைமையையும் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களையும் பேணி நடப்பதே ஏற்புடைத்து. ஒவ்வொரு நாட்டிற்கும் அவர்களுக்கென்றுதனித்துவமானதும் பிரத்தியேகமானதுமான சட்டங்கள் இருக்கின்றன அவை அவர்களது உரிமை, அவற்றை பேணி நடப்பதாக இருந்தால் மாத்திரமே அந்த நாட்டிற்குள் நுழைதல் வேண்டும். அங்கனம் இல்லாது நுழைந்தபின் அந்நாட்டின் இறையாண்மையையும் சட்டதிட்டங்களையும் மீற நினைத்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பதுவது இயல்பு. உங்கள் மதக் கோட்பாட்டின் படி பெண்கள் தலைவிரி கோலமாக வெளியில் திரிவது அனுமதிக்கப் பட்திருக்கலாம் அனால் சவூதிக்குள் நுழைந்த பின் அவ்வாறுதான் இருப்பேன் என்று அடம்பிடித்தால் தண்டனை நிச்சயம். பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரை எந்த மதத்தையும் பின்பற்றலாம் அதனை பகிரங்கமாக பிரஸ்தாபிக்கலாம் அது அவர்களது சட்டம்.
    மேலும் எந்த இஸ்லாமிய நாடும் வேற்று மதத்தினர் எமது நாட்டிற்குள் நுழையக்கூடாது என்றோ வேற்று மதத்தை வழிபடக்கூடாது என்றோ கூறவில்லை அப்படிக் கூறி இருந்தால் அந்நிய மதத்தினர் இஸ்லாமிய நாடுகளில் வருடக்கணக்கில் வாழ முடியாதிருந்திருக்கும். ஆனால் அவர்கள் கூறுவது எங்கள் நாட்டின் சட்டப்படி பகிரங்கமாக பிற மத வழிபாடுகளில் ஈடு படல் ஆகாது என்பதாகும். அது அவர்கள் இறைமை அதை இடித்துரைத்தலாகாது. அண்மையில் பௌத்த நாடான இலங்கையில்கூட பகிரங்கமான நிர்வாணக்குளியலுக்காக ஜெர்மானிய நாட்டவருக்கு தண்டனை வழங்கப்பட்டது, அதற்கு முன்னர் புத்தரை தன் உடம்பில் பச்சை குத்தி இருந்த குற்றச்சாட்டின் பேரில் இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப் பட்டார்கள் இது இலங்கையின் குற்றமா? இல்லவே இல்லை இது இலங்கையின் இறையாண்மை பேணுதலும் சட்டத்தை நடைமுறைப் படுத்துதலுமாகும்.
    வளைகுடா நாடுகளில் சிலவற்றில் பிற மத வழிபாட்டுத்தலங்கள் நிர்மாணிக்கப்பட்டு வழிபாடுகள் நடை பெறுகின்றன அது தெரியுமா. பின்னூட்டம் எழுதும்போது உங்களுக்கே எல்லாம் தெரிந்தது போல் இறுமாப்புடன் எழுத வேண்டாம் “ கற்றது கையளவு, கல்லாதது உலகளவு” என்பதை கருத்தில்கொண்டு பதிவிடுங்கள். – நன்றி-

    ReplyDelete
  3. JJ are you an attention seeker? I think we better ignore her. She just say things to get attention. She is a " wannabe"

    ReplyDelete
  4. உன்னைபோல் பிறரையும் நேசி எனும் வார்த்தைக்கு ஏற்றார் போல் நடுநிலையான சிந்தனை உங்களப்போல் உள்ளவர்கள் தான் இவ் உலகத்திற்கு தேவை எல்லோரும் இப்படி சிந்திக்க தொடங்கிவிட்டால் உலகத்தில் சண்டை சச்சரவே இருக்காது பிறருக்கு தொந்தரவான எக்காரியத்தையும் செய்யாதிருந்தாலே அமைதி ஏற்பட்படும்

    ReplyDelete
  5. Gee, பொது இடங்களில் முகத்தை மூடுவது பல நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், ஆனால் அங்கே குடியேறிய இஸ்லாமியர் தங்களுக்கு அதனை அனுமதிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கின்றார்களே?

    ReplyDelete
  6. Christianity in the Middle East

    https://en.wikipedia.org/wiki/Christianity_in_the_Middle_East

    Some more facts here.

    www.bbc.co.uk/news/world-middle-east-15239529

    Saudi ai mattum Pin Point pannikondu ''Ella Muslim nadugalum appadithan endru kooruvathu madathanam.

    ReplyDelete
  7. இது விஷயத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை, காரணம் முகத்தை முழுமையாக மூட வேண்டும் என்று இஸ்லாத்தில் கட்டாய சட்டமாக்கப் படவில்லை, அனால் நான் முன்னர் குறிப்பிட்டிருந்தது போல், பெண் அந்நிய ஆடவர்கள் நடமாட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் அவளது உடல் அமைப்பின் ஏற்ற இறக்கங்கள் மற்றவர்களால் அடையாளப் படுத்த முடியாத படி உடை அணிந்து செல்லவேண்டும் என்பது கட்டாய சட்டம்.

    ReplyDelete
  8. gee, நீங்கள் முதலில் கேட்ட விடயம்.



    مسلم
    عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: ” كَانَ فِيمَا أُنْزِلَ مِنَ الْقُرْآنِ: عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ، ثُمَّ نُسِخْنَ، بِخَمْسٍ مَعْلُومَاتٍ، فَتُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُنَّ فِيمَا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ ”
    ஆயிஷா றழி அவர்கள் கூறினார்கள்: “குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் குடித்தால் மஹ்ரமியத் உண்டாகும்” என்று அல்குர்ஆனில் இருந்து, பின்பு “குறிப்பிட்ட ஐந்து தடவைகள் மஹ்ரமியத்தை உண்டாக்கும்” என்பதைக் கொண்டு மாற்றப்பட்டது, அவைகள் அல்குர்ஆனில் ஓதப்படும் நிலையிலேயே நபிகளார் மரணித்தார்கள்.”

    இது முஸ்லிம் என்னும் இஸ்லாமிய மூலாதார நூலில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வசனம் உதுமான் தொகுத்து, அனுமதித்த குரானில் இல்லையாம். இருந்தால், எந்த அத்தியாயம் என்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  9. நிலவன்:
    மிக்க நன்றி கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. நன்றி gee, உங்களுடைய அணுகுமுறை அழகாக உள்ளது. ஏனைய இஸ்லாமியர்களும் இப்படி இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.

    ReplyDelete
  11. நிலவன் இதில் என்ன சொல்ல வருகிறார்? அல்குரான் பாதுகாக்கப்படவில்லை என்றா?
    இதிலே இருக்கிறது விடைகள். இந்த ஹதீத் சுமார் 7 கிரந்தங்களில் பதுவயு செய்யப்பட்டடுள்ளது.
    1) குர்ஆனை ஒன்று சேர்க்கும்போது சில பொதுவான நிபாந்தனைகள் வைகப்பட்டது அதில் ஒன்று . எவர் அல்குரானின் வசனத்தை சொல்லுகிறாரோ அவர் அந்த வசனத்தை எழுத்து வடிவில் எழுதி இருக்க வேண்டும் அத்தோடு அதைமனனமினுவதுடன் இரண்டு பேருக்கு குறையாமல் அந்த வசனத்தை உறுதிப்படுத்தவும் வேண்டும்.(இரண்டு பேர் அதை எழுதி இருக்க வேண்டும்)
    மேலே சொன்ன ஹதில் ஆயிஷாரலியல்லாஹு அவர்களை தவிர வேறு யாரும் இப்படி இருப்பதாக சொல்லவும் இல்லை எழுதி இருக்கவும் இல்லை.

    2) “அவைகள் அல் குரானில் ஓதப்படும் நிலையிலேயே நபிகாளார் மரணித்தார்கள் “ இதில் எங்கோ நபிகளார் ஓதியதாகவோ /நபிகளார் ஒத்தியத்தை நான் கேட்டேன் என்றோ இல்லை.யாரோ ஒருவர் / யார் என்பது கூட சொல்லப்பட்ட வில்லை.

    3) ஒரு வாத்திக்கு அப்படியே ஆயிஷா ரலியல்லாஹு அவர்கள் ஓதினார்கள் என்றால், உஸ்மான் ரலியல்லாஹு அவர்களின் காலத்தில் குரான் ஒன்று சேர்க்கப்பட்ட போதுஆயிஷா ரலியல்லாஹு இருந்தார்கள். அவர்கள் எந்த மறப்பும் தெரிவிக்க வில்லையே.

    (இதை நாங்களே இறக்கி வைத்தோம் இதை நாங்களே இதை பாதுகாப்போம்.அல்குரான் )

    ReplyDelete
  12. மின்ஹாஜ், இது உங்கள் சொந்த விளக்கமா? இல்லை யாராவது பெரிய அறிஞர்களின் விளக்கமா? அப்பி ஆயிஷா (ரலி) சொனந்தன் விளக்கம் என்ன?

    ReplyDelete
  13. எனது கருத்து எங்கே? ஏன் அந்த உண்மைகளை மறைத்தீர்கள்? Mini Minhaji அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

    ReplyDelete
  14. எனது கருத்தை சுருக்கமாக மீண்டும் பதிகின்றேன்.

    முகமது நபிக்கு தெரியாமல் ஆயிஷா அம்மையார் வேறு குரானை களவாக வைத்திருந்தார் என்று சொல்ல வருகின்றீர்களா?

    குரான் மாற்றப்பட்டது என்பதற்கான ஒரு சிறு ஆதாரம், இஸ்லாமிய பதிவு ஒன்றிலிருந்து.

    // குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக்கையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
    அலீ (ரலி) அவர்கள் 6218 வசனங்கள் என்கிறார்கள்.
    இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 வசனங்கள் என்கிறார்கள்.
    ஹுமைத் என்பார் 6212 வசனங்கள் என்கிறார்கள்.
    அதா என்பார் 6177 வசனங்கள் என்கிறார்கள்.
    இன்னொரு சந்தர்ப்பத்தில் 6204 வசனங்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
    மக்கள் பொதுவாக 6666 வசனங்கள் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்கள்.
    இப்போது உலகம் முழுவதும் அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளில் 6236 வசனங்கள் உள்ளன.//

    இப்பொழுது உங்களுக்கு புரிகின்றதா?

    மேலும், உதுமான் அவர்கள் வீட்டுக்காவலில் முற்றுகை இடப்பட்டு, நீர் கூட கொடுக்காமல் வைக்கப் படுகின்றார், அந்த வீட்டிற்குள் அவரை கொலை செய்வதற்காக சென்றவர்களில் முக்கியமானவர் ஆயிஷா அம்மையாரின் சகோதரர் அப்துர் ரஹுமான் என்பவர்.

    சிந்தியுங்கள், ஏன் அவர் சென்றார்?

    மேலதிக விபரங்கள், இதனை பிரசுரித்த பின்னர், தேவை என்றால் வழங்கப்படும்.

    ஒரு விடயத்தை ஆராய்ந்து பார்க்கும் பொழுதுதான் பல உண்மைகள் வெளியாகின்றன.

    ReplyDelete
  15. Abdul Rahman
    உஙூகளுக்கு இது தொடர்பாக விளக்கம் வேண்டுமானால் உங்களுக்குத் தெரிந்த உலமாக்களிடமு கேட்கவூம் பொது வலைத்தளத்தளத்தில் உங்கள் கேள்விகளை கேட்பதால் அது மற்றவர்களையூம் பாதிக்கும்

    ReplyDelete
  16. @A.Raheem .
    சொந்தகருத்து சொல்லுவதட்கு இது ஏதும் நான் எழுதிய புத்தம் இல்லை.
    நான் குறிப்பிட்டதை விட அதிகமான விளக்கம் இங்கே கிடைக்கும் .

    ( 1 ) المبسوط للسرخسي ج5ص134 .
    ( 2 ) تفسير القرطبي ج15ص109.
    ( 3 ) فتح الباري ج9ص147.
    ( 4 ) التمهيد لابن عبد البر ج8ص268-269.
    ( 5 ) الجوهر النقي لابن التركماني ج7ص454 ط دار الفكر

    ReplyDelete
  17. @நிலவன்

    உண்மைகளை மறைக்க வேண்டிய தேவை இல்லை எனக்கு.

    ReplyDelete
  18. Minhaji, நான் முதலில் பதிந்த கருத்து இந்த இணையத்தளத்தில் வெளியாகவில்லை, அதனால், அவர்களிடம் தான் கேட்டேன், உண்மையை மறைத்தது என் என்று. உங்களிடம் அல்ல.

    ReplyDelete
  19. Minhaj
    பதிலுக்காக சரியானதையூம் தர்க்க ரீதியில் பொருந்துவதையூம் தேடி எடுப்பது எவவ்றுவூ கஎனம் என்னு எனக்குத் தெரியூம் இருந்தும் நீங்களும் சில விடயங்களை விட்டு விலகி இருப்பiது சிறந்தது அடுத்து அப்துல் ரகுமான் நீங்கள் நபர் யார் என்னு தெரியாமல் சபபோட் பன்னுகிறீர்கள்

    அடுத்து அவர் கடைசியில் குறிப்பிட்ட விடயம் அறபியில் சில வசனங்கள் சிலரால் இரண்டாக அல்லது ஒன்றான வாசிக்கப்படுதல் சாதாரமானதே மீண்டும் இதை வைத்து அவர் உங்களைக் முஸ்ம்களைள்க் குழப்ப்ப பாரக்ககிறார் அவர் சொ;லியிருக்கும் கருத்து மௌலவி PJ ஏற்கனவே பல தடவை பதில் சொன்னது அதற்கு விளக்கம் அவருக்கும் தெரியூம் ஆனால் உயங்களைப் போட்டு பிடிக்க முஸ்லிம்களைக் குழப்பnவூ அவர் எத்தனிப்பது கவனம்

    த யவூசெய்து அவரின் நோக்கத்தைப் பரிந்து பதிலளியூங்கள் எங்கே நமது மாரக்கம் தெரிந்த அன்வர் அலி சலபி அவர்கள் எங்கே பதில் வரட்டும்

    ReplyDelete

Powered by Blogger.