"உள்ளக விசாரணை பொறிமுறை" - முஸ்லிம் விவகாரங்களும் உள்வாங்கப்படல் வேண்டும்..!
அமெரிக்க மற்றும் இலங்கை அரசினால் முன்வைக்கப்படும் யோசனைகளை சர்வதேச மனித உரிமை ஆணையம், மற்றும் சம்பந் தப்படும் தரப்புக்கள் அங்கீகரிக்கின்ற பட்சத்தில் உள்ளக மற்றும் சர்வதேச பொறிமுறை ஒன்றின் கீழ் உருவாக் கப்படும், உண்மை கண்டறியும் ஆணைக்குழு, சட்ட உதவி வழங்கும் ஆணையம், கருணை மன்று, அவற்றின் கீழ் வரும் சகல உப குழுக்கள் என்பவற்றில் உரிய முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களது விடயங்களும் முழுமையாக உள்வாங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை முஸ்லிம் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.
சர்வதேச தீர்மானங்களை வரவேற்று அறிக்கைகள் விட்ட பின்னர் வெறும் கையுடன் பேச்சுவார்த்தைகளில் காலத்தை கடத்தாது உரிய நிபுணர் குழுக்களை அமைத்து முஸ்லிம் விவகாரங்களை தரவுகளுடன் ஆவணப்படுத்தி முறையாக சர்வதேச மற்றும் உள்ளக பொறிமுறையின் கவனத்திற்கு கொண்டு வருவதனை முஸ்லிம் அரசியல் தலைமைகள் முன் வர வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்த கால இனப்பிரச்சினை வரலாற்றில் பாதிப்புக் குள்ளான சகல சமூகங்களுக்கும உரிய நீதியை நியாயத்தை பெற்றுக் கொடுப்பதிலேயே யதார்த்த பூர்வமான இன நல்லிணக்கமும் சமாதான சகவாழ்வும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் முதல் 2009 யுத்த நிறைவு வரை இடம்பெற்ற விவகாரங்கள் குறித்தே ஆராய்ந்து சிபாரிசுகளை முன்மொழிந்துள்ளது.
குறிப்பிட்ட ஆணைக்குழுவில் கூட முஸ்லிம் சமூகம் சார்பாக முறையான சாட்சியங்களை முன்வைக்கவோ அல்லது அது முஸ்லிம்களது விவகாரங்களை உள்வாங்க போதுமானதல்ல என்பதனை வலியுறுத்தவோ இந்தவொரு முஸ்லிம் கட்சிக்காரரும் முன்வரவுமில்லை. சர்வதேச அரங்கில் சமர்ப்பிக்கத் தராதரம் கொண்ட எத்தகைய ஆவணங்களை தயாரிக்கவோ, தரவுகளை திரட்டவோ இல்லை. இந்நிலை இனியும் ஏற்படக் கூடாது எனப் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

We will wait for what is the taken by this goverment thereafter we are the choose right person to be president on next.
ReplyDelete