Header Ads



நீடிக்கும் அமைச்சரவை குழப்பம்


அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் 30 பேருக்கு காரியாலயங்கள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ் அமைச்சர்கள் அமைச்சுப் பணிகளை மேற்கொள்ள காரியாலயங்களை தேடுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த அனைவரும் கொழும்பு நகரிற்கு உள்ளேயே காரியாலயம் தேடி வருவதனால்  காரியாலங்களை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அமைச்சுக்களுக்காகவே நிர்மானிக்கப்பட்ட பத்தரமுல்ல செத்சிறிபாய புதிய சட்டடத்தின் காரியாலயங்களையும் ஏற்கனவே சில அமைச்சர்கள் ஒதுக்கிக் கொண்டுள்ளனர்.

இதனால் அங்கு மேலும் காரியாலயங்களுக்காக இடத்தை ஒதுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அநேகமான அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்கள் கொழும்பு நகரிற்குள்ளேயே அமைந்துள்ள தனியார் கட்டடங்களில் காரியாலயம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். எனினும் இதற்காக இதுவரையில் விலை மனுக் கோரல்கள் செய்யப்படவில்லை.

இதேவேளை  அமைச்சுக்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்வதிலும் அமைச்சரவை அமைச்சர்களும் ராஜாங்க அமைச்சர்களுக்கும இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கியமான நிறுவனங்கள் அனைத்தையும் அமைச்சரவை அமைச்சர்கள் தமது அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும்  தமக்கு எவ்வித பொறுப்புக்களும் வழங்கப்படவில்லை எனவும் ராஜாங்க அமைச்சர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அமைச்சரை அமைச்சர்களினால் நடத்தப்படும் செய்தியாளர் சந்திப்புக்களில் பங்கேற்க தமக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என ராஜாங்க அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.