மாற்றங்காணும் கிண்ணியா கடலோரத் தோற்றம், இளம் ஆய்வாளர்களுக்கு அரிய வாய்ப்பு..!

-மொஹமட் இக்ரிமா-
இந்த போட்டோக்கள் கிண்ணியா உப்பாறு பாலத்தடியே எனது கமராவில் பதிவானவை. எனது நீண்டகாலமான கிண்ணியாவின் கடலோர கண்காணிப்பின் (Monitoring) விளைவாக பெறப்பட்ட சில சுவாரசியமான அவதானங்களை அன்பர்களோடு பகிர்ந்து இன்புற விரும்புகின்றேன்.
எமது சிறு பராய காலங்களில் கிண்ணியா கடலோரம் ஒரு அரிப்பேந்து பிரதேசமாகவே (erosional belt) காணப்பட்டதை இங்கு வாழும் என்னைப்போன்ற பலர் நன்றாகவே அறிவர். ஒவ்வொரு வருடமும் இரண்டு மூன்று அடி தறை, கடலால் விழுங்கப்படுவது சாதாரண நிகழ்வு. !. எமது கண் முன்னே இதுவரை இரண்டு வீதிகள் விழுங்கி ஏப்பம் விடப்பட்டுள்ளன. ஆனாலும் வரலாற்றை பின்னோக்கின் இது பல மடங்கு என்பது உறுதி!.
ஆனாலும் அன்மைக்காலமாக அதன் தோற்றத்தில் ஏற்பட்டு வரும் உருவவியல் (morphological chage) மாற்றம் அது ஒரு படிவேந்து ( (depositional belt) பிரதேசமாக மாறிவருகிறதா எனும் கேள்வியை எழுப்புகிறது. அவ்வாறாயின் கிண்ணியா மக்கள் கடவுளால் வரமளிக்கப்பட்டவர்கள்தான்.
உப்பாறு பாலத்தின் மேலே நின்று பார்க்கும் எவரும் இதனை இலகுவில் புரிவர்.
இணைப்பிலுள்ள போட்டோக்களை நன்கு அவதானியுங்கள். புதிய குட்டித்தீவுகள் பல பாலத்தின் இரு மருங்கிலும் உருவாகிவருவதனையும் கரையோரம் படிம அபிவருத்தி (Depositional development) அடைந்து மணல் திட்டுகளாக மாறி வருவதனை புரிந்துகொள்வீர்கள். இப்பிரதேசம் எதிர்காலத்தில் கிண்ணியாவிற்கான பாரிய பொதுப்பொழுதுபோக்குத் (Beach recreational site) தளமாக அபிவிருத்தி செய்யப்பட மிகப்பொருத்தமாகும். இது கிண்ணியா நகரசபைக்கு பாரிய வருமான மூலமாகவும் பலருக்கு நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்பை வழங்கும் வழியாகவும் அமையலாம். மட்டுமல்லாமல் தேவைக்கில்லாத கடலோர இரானுவப்பிரசன்னத்தையும் இம்முயற்சி இல்லாமலாக்கும். எனவே இவ்விடயத்தை வர இருக்கும் நகரசபையினர் தீவிரமாக கவணஞ்செலுத்துவது காலத்தின் தேவையாகும்.
சில அன்பர்களின் கரத்துப்படி, நாம் சுட்டிக் காட்டிய தீவுப்படிவுகள் உருவாவதும் பின்னர் வெள்ளத்தால் அடிபட்டுச் செல்வதும் வளமையான நிகழ்வுகள் என்ற வாதம். ஒரு புரம் இருக்கவே செய்கின்றது.
ஆனால் இப்போது உருவாகிவரும் தீவுகள் வருடாவருடம் பருமனில் அதிகரிப்பதையும் வெள்ளத்தால் அமிழ்கின்றதேதவிர அவை அடித்துச்செல்லப்படவில்லை. ஆரம்பத்தில் எங்கு உருவாகியதோ அவ்விடத்திலேயே நிலைத்திருந்து வளர்வதை விஞ்ஞான பின்புலம் உள்ள எவரும் புரிந்துகொள்வர்.
இவை இவ்வாறு அண்மைக்காலமாக ஏற்படுவதற்கு என்ன காரணங்களை கருதுகோல்களாக முன்வைக்கலாம். விஞ்ஞான முறை அனுகுமுறையில் அவதானம் என்ற முதல் படியை அடுத்துள்ள படி அவதானத்திற்கான கருதுகோல்களை உருவாக்குவதாகும். இதன்படி எமது சிறிய அறிவிற்கெட்டியவகையில் பின்வரும் கருதுகோல்களை உருவாக்கலாம்.
1. மகாவெளி நதி கலக்கும் கழிமுகத்துவாரங்களின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள பாலங்களின் பாரிய தூன்கள் (piles) நதி ஏற்றிவரும் கங்கை மணலை தடை ஏற்படுத்துவதன் மூலம் மணற்படிவை ஏற்படுத்தலாம். ஏனெனில் பாலம் அமைத்தபஇன்னரே இம்மாற்றம் அவதாணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அல்லது ...
2. மகாவெளி கங்கையில், கிண்ணியா மேற்பகுதியில் யுத்தவெற்றியின்
பின்னர் முடுக்கிவிடப்பட்ட அபரிமிதமான மணல் அகழ்வினால் (Accellarated sand excavation) நதி நீரடி மணற்படிமம் கிழரிவிடப்படுகிறது. இதனால் நதி நீருடன் அடிபட்டுவரும் மணல் அங்கு படியலாம். ஏனெனில் மணல் அகழ்வு ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இப்படிவுகள் தோன்ற ஆரம்பித்தன.
3. பேரழிவை ஏற்படுத்திய சுனாமியின் பின்விளைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் சுனாமியின் பின்னர் கடலடி புவியியல் கட்டமைப்பில் (Marine geological structure) மாற்றம் ஏற்பட்டுள்ளதை விஞ்ஞானம் உறுதி செய்துள்ளதை நாம் யாவரும் அறிவோம். இதன் விளைவாக கண்டத் தகடுகளில் (continental plates) கூட மாற்றம் நிகழ்ந்துள்ளது. பல புதிய நாடுகள் பூமியதிர்வு அபாய வலயத்தினுள் (Earth quack dangerous zone) வாங்கப்பட்டிருப்பது இதனை உறுதி செய்கின்றது. எனவே இந்த மாற்றம் கடலடி நீரோட்டத்தில் (Under water currrent action) மாற்றத்தை ஏற்படுத்தயிருக்கக்கூடாது எனும் கருதுகோலை வரவழைப்பதில் என்ன தப்புள்ளது. ? இந்த மாற்றம் சிலவேளை படிவேந்து பிரதேசங்களை அரிப்பேந்து பிரதேசங்களாகவும், அரிப்பேந்து பிரதேசங்களை படிவேந்து பிரதேசங்களாகவும் மாற்றுயிருக்கலாம். அம்பாறை, ஒலுவில் துறைமுகப்பிராந்திய கடலோரம் அதி தீவிர அரிப்பேந்து பிரதேசமாக மாறியிருப்பது இவ்வெடுகோலை உறுதி செய்கின்றது. ஒலுவில் வர்த்தக துறைமுக திட்டம் கைவிடப்பட்டமைக்கு பிரதான காரணங்களுல் ஒன்றுதான் அது அவ்வேளை படிவேந்து பிரதேசம் ஆனபடியால் வருடா வருடம் ஆழப்படுத்தவேண்டி ஏற்படும் என்பது .! அல்லது.
4. மேற்சொன்ன எடுகோல்களின் கலவையாகவோ இவை தவிர வேறு காரணங்களாகவோ இருக்கலாம். என்னவோ இறைவனே சகலதும் நன்கறிந்தவன்.
ஆனாலும் இவை வெறும் கருதுகோல்களே! . இதன் நிகழ்தகவை பரிசீலிக்க நாம் விஞ்ஞான முறையின் அடுத்த கட்டமான சான்றுகள் சேகரித்து (Data collection) ஆய்வினை வடிவமைக்கும் வேலைக்குச் (designing experiment) செல்ல வேண்டும். இதனை செய்து சாதிப்பவனே விஞ்ஞானியாகின்றான்.
எமது நாட்டில் குறிப்பாக எமதூரில் ஆய்வுகள் , ஆய்வுக்கட்டுரை என்பன வெறுமனே கட் என்ட் பேஸ்ட் (Cut n paste) ஆக அல்லது டவுன் லோடிங் (Downloading) ஆகவே அமைகின்றன.
இதனை விடுத்து உண்மையான ஆய்வில் ஆசையுள்ள விஞ்ஞானியாகும் தேட்டமுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு இத்தீவு உருவாக்கம் ஆய்விற்கான சிறந்த கருப்பொருளாகும். எவருக்கு எம்மில் விஞ்ஞானியாகும் ஆசையுண்டு. ?

Post a Comment