Header Ads



மாட்டிறைச்சியும், முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரமும்

இந்தியாவின் ஆறு மிகப் பெரிய மாட்டிறைச்சி நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானதாகும் என்ற செய்தி பலரது புருவங்களை நிச்சயம் உயரச் செய்யும்! 

இந்திய முஸ்லிம்கள் அதிக அளவில் மாட்டிறைச்சி உண்பவர்கள்; இறைச்சிக் கடைகளை முஸ்லிம்கள்தான் நடத்தி வருகிறார்கள். பிராணிகளை அதிகம் அறுப்பது முஸ்லிம்கள்தான். இறைச்சியை நுகர்வோரில் முஸ்லிம் சமுதாயம் தான் முன்னிலையில் இருக்கிறது என்றெல்லாம் சிலவேளை அவதூறாகவும், மிகைப்படுத்தியும் பொதுவாக கூறப்படுகிறது. 

இந்துத்துவாக்கள் இதைத்தான் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரமாக பயன்படுத்துகின்றன. இறைச்சி ஏற்றுமதியில் முஸ்லிம் நிறுவனங்கள்தான் ஈடுபடுவதாகவும், இதன் மூலம் வரும் நிதி யாதாரங்கள் தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவெல்லாம் கூட இந்துத் துவாக்கள் பிரச்சாரம் செய்து வருகின் றன.

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய 6 இறைச்சி நிறுவனங்களில், 4 நிறு வனங்களை இந்துக்கள் நடத்துகின்றனர் என்பது முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் உள்ளது. 

உண்மையில் உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்களும், யூதர்களும்தான் அதிகளவில் இறைச்சி சந்தையில் ஈடுபடுகின்றனர் என்பது புள்ளிவிபர ரீதியிலான உண்மையாகும். இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனைத் தொடர்ந்து உலகில் மிகப் பெரிய மாட்டிறைச்சி சந்தையை வைத்திருப்பது பிரேசில். இதையே இந்திய அளவில் நாம் பார்க்கும்போது இந்துக்கள்தான் மிகப் பெரிய அளவில் இறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கின்றனர். இந்த உண்மைக்கு மாற்றமாக, முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்று கூறி அவர்கள் பலவகைகளிலும் துன்புறுத்தலுக்கு இலக்காக்கப்படுகிறார்கள். 

பல சம்பவங்களில் இந்துத்துவ குண்டர்களால் முஸ்லிம்கள் தாக்குதலுக்குள்
ளாகியுள்ளனர். காவல்துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மாட்டிறைச்சியை தொடர்புபடுத்தி – அதாவது, மாடு அறுக்கிறார்கள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு செல்கிறார்கள் என்ற காரணங்கள் காட்டப்பட்டு, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. இந்துத்துவ குண்டர்கள் முஸ்லிம்களின் தியாகத் திருநாளன்று (பக்ரீத் பண் டிகை) வகுப்புவாத சூழ்நிலையை மட்டுமே உருவாக்குவதற்காகவே தீவிரமாக இயங்குகிறார்கள். 

ஆனால், இதே இந்துத்துவா குண்டர்கள், உலகளவில் ஊடக கவனத்தை பெறுகின்ற வகையில் ஆயிரக்கணக்கான பிராணிகள் அறுக்கப்படுகின்ற இந்துப்பண்டிகைகளை வசதியாக மறந்து விடுகின்றனர். பசுவை பலியிடும் இந்துமத சடங்குகள் ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள பல கோவில்களில் நடைபெறுகின்றன. ஆனால், ஆச்சரியப்படும் வகையில் பசுபதிநாத் கோவில் வளாகத்தில் பிராணிகள் பலியிடப்படுவதை உயர்நீதிமன்றம் தலையிட்டு தடுத்து நிறுத்தியிருக்கிறது.

மிக சமீபத்தில் நேபாளத்திலுள்ள “காதிமை’ கோவில் விழாவில் சுமார் 2.5 லட்சம் கால்நடைகளை பலியிடப்பட்டது உலகின் கவனத்தை ஈர்த்தது. இச்சூழலில், இந்து மதத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் மாட்டிறைச்சியை பெரிய அளவில் சப்ளை செய்பவராக உள்ளனர் என்பது கவனத்திற்குரியது. ஆனால், தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வியாபாரத்திற்காக மாடுகளை விலைக்கு வாங்கிச் சென்றாலும், தலித் சமூகத்தினர் இறந்து போன மாடுகளை திண்பதற்காக எடுத்துச் சென்றாலும் அவர்கள் மீது காவிகளும், காக்கிகளும் மிருகங்களை விட மூர்க்கமாகப் பாய்கிறார்கள். 

பின்வரும் 4 மிகப் பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள் இந்துத் தொழிலாதிபர்களுக்குச் சொந்தமானவை. 

1. அல் கபீர் எக்ஸ்போர்ட்டர் பிரைவேட் லிமிடெட். இதன் முதலாளிகள் : சதீஷ் மற்றும் அதுல் சபர்வால் – மும்பை, மஹாராஷ் டிரா 
2. அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ் பிரை வேட்லிட் இதன் முதலாளி : சுனில் கபூர் – மும்பை, மஹாராஷ்டிரா 
3. எம்.கே.ஆர். ஃபிரோசன் ஃபுட் எக்ஸ்போர்ட் பிரைவேட் இதன் முதலாளி : மதன் அபோட், புதுடெல்லி 
4. பி.எம்.எல். இன்டஸ்ட்ரீஸ் பிரை வேட் லிட் இதன் முதலாளி : ஏ.எஸ். பிந்த்ரா – சண்டிகர், பஞ்சாப் 

இந்த இந்துக்களுடைய நிறுவனங்களின் பெயர்களை கவனியுங்கள். முதலி ரண்டு நிறுவனங்கள் அரபு பெயர்களைக் கொண்டிருக்கின்றன. மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் இந்(து)த நிறுவனங்கள் – அரபு நாடுக ளின் நன்மதிப்பைப் பெறவும், முஸ்லிம்களால் இந்த நிறுவனங்கள் (இஸ்லாமிய முறையில்) நடத்தப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் இதுபோன்ற பெயர்களை தேர்ந்தெடுத்துள்ளன. அடுத்த இரண்டு நிறுவனங்களும் பொதுவான பெயர்களை வைத்திருக்கின்றன. 

இவற்றுக்கும் மேற்கண்ட நிறுவனங்களின் நோக்கம் உள்ளார்ந்த ரீதியில் உள்ளது. அதே சமயம், இந்த நிறுவனங்களை நடத்துவது இந்துக்கள்தான் என்று வெளியில் தெரியக் கூடாது என்பதில் இந்த நான்கு மாட்டிறைச்சி நிறுவ னங்களும் ஒருமித்த கருத்தில் இருந்து கொண்டு, இறைச்சி வியாபாரத்தில் கொழுத்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது. வியாபாரம் என்று வந்து விட்டால், கொள்கையாவது மதச் சடங்காவது மண்ணாங்கட்டியாவது! பசுவதை பேசும் பாபா ராம்தேவ் போன்ற சாமியார்கள் தாங்கள் நடத்தும் மருந்து கம்பெனிகளில் மாட்டின் எலும்புகளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கி றார்கள் என்பது நாட்டு மக்கள் எத்தனை பேருக்குத் தெரியும்! தாங்கள் மறைமுகமாக செய்யும் மாட்டிறைச்சித் தொழிலை முஸ்லிம்கள் பகி ரங்கமாக செய்து வருவதால் தங்களது பொருளாதாரம் பாதிக்கிறது என்று அதைத் தடுக்க இந் (து)த பெரு முதலாளி கள்தான் மாட்டிறைச்சியை மையப் டுத்தி வகுப்புப் பதட்டங்களை ஏற்படுத்துகிறார்கள் என்று யாராவது சொன்னால் அதை அவ்வளவு எளிதில் புறக்கணித்து விட முடியாது!

3 comments:

  1. India is the worlds biggest exporter of meat.
    The above 4 companies are run Hindu Brahmen. Like I said before the Brahmans add the Jews of Hindus.

    It's the duty of middle Eastern and even Jaffnamuslim to this fact to the importers of meat in Middle East.

    ReplyDelete
  2. உள்ளூரில் மாடு அறுப்பை நிறுத்தினால் தான் மாட்டின் விலை குறையும். விலை குறைந்தால் ,குறைந்த விலையில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யலாம் என்பதுதான் இந்த நிறுவங்கள் ஆசை.இதை விளங்காத பிஜேபி மாடு அறுப்பை முஸ்லிமின்களின் மேல் போட்டு கொலைவெறியில் திரிகிரது.

    ReplyDelete
  3. I dont even know what I have written above. Looks like ''auto words'' has done the damage. Sorry

    ReplyDelete

Powered by Blogger.