பாகிஸ்தான் + ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் வட-கிழக்கு மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பாடாசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 12 மாணவிகள் பலி
பாகிஸ்தானில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பாடசாலையிலிருந்து வெளியேற முயற்சித்த 12 மாணவிகள் அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பல மாணவிகள் அபாயகரமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியத் தலைநகர் டில்லியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, பலர் கட்டிடங்களிலிருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.
இந்தக் கடுமையான நிலநடுக்கம் 7.5 அளவு கொண்டது என்றும் அது ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதி நகரான ஃபைசாபாதுக்கு தெற்கே 75 கிலோமீட்டார் அளவில் மையம் கொண்டிருந்தது என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment