முப்படையினருக்கு விசேடசேவை, விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு (படங்கள்)
முப்படையினருக்கு விசேட சேவை விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆற்றிய சேவையை கௌரவிக்கும் வகையில் இந்த விசேட சேவை விபூஷண பதக்கம் வழங்கப்படுகின்றது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முப்படைகளைச் சேர்ந்த 30 அதிகாரிகளுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது.
முப்படைகளின் தளபதிகளுக்கும் விசேட சேவை விபூஷண பதக்கம் அணுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment