Header Ads



அட்டாளைச்சேனையில் 1 கோடி ரூபாய் பெறுமதியுடைய 5000 பாரை மீன்கள் பிடிபட்டன


அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களுக்கு இன்று வியாழக்கிழமை அதிகளவான பாரை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதியிலுள்ள கரைவலை மீனவர்களுக்குச் சொந்தமான வலையிலேயே இவ்வாறு பாரை மீன்கள் சிக்கியிருந்தன. சுமார் 5000 பாரை மீன்கள் இவ்வாறு கிடைத்ததாகவும், இவை  1 கோடி ரூபாய் பெறுமதியுடையவை எனவும் அறிய முடிகிறது.

தற்போது சில்லறைச் சந்தையில் பாரை மீன் ஒரு கிலோ 700 ரூபாவுக்கு விற்பனையாகின்றது. அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக, அதிகளவு மீன்கள் கிடைத்து வருகின்றன.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவும், இவ்வாறு அதிகளவிலான பாரை மீன்கள் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  மிக அதிக காலமாக, இப் பிரதேசத்தில் மீனவர்கள் போதியளவு தொழிலின்றி காணப்பட்ட நிலையில், இவ்வாறு அதிகளவிலான பாரை மீன்கள் கிடைத்திருப்பது, மீனவர்களிடையே மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.