Header Ads



இறைச்சிக்காக அல்ல, மதத்தின் பெயரை வைத்து கொலை - ஒவைஸி ஆவேசம்

உ.பியில் மாட்டிறைச்சி உட்கொண்டதற்காக ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் மதத்தின் பெயரல் கொலை நடந்து இருப்பதாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள தாத்ரி மாவட்டத்தின் பிசடா கிராமத்தில் இக்லாப்(வயது 50) என்பவர் பசுவின் இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக தகவல் பரவியது. இந்த பிரச்சினையில் அந்த கிராமவாசிகளால் இக்லாப் அடித்துக் கொல்லப்பட்டார். அவருடைய மகன் தானிஷ் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரபிரதேச அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு ஒன்றை அனுப்பியுள்ளது. 

இந்த நிலையில், ஐதராபாத் எம்.பியும் ஏஐஎம்.ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி இன்று கிராம மக்களால் அடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படும் இக்லாபின் என்பவரது இல்லத்திற்கு சென்றார். அங்கு அவரது மனைவியை சந்தித்து ஆறுதல் கூறிய ஓவைசி, மாநில சமாஜ்வாடி அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இது குறித்து அவர் கூறுகையில், 

இறைச்சிக்காக இந்த தாக்குதல் நடைபெறவில்லை.  மதத்தின் பெயரை வைத்து அவர் கொல்லப்பட்டிருக்கிறார். முன்கூட்டியே திட்டமிட்டு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான தாக்குதல் இது. இந்த சம்பவம் ஒரு விபத்து அல்ல. இந்த தாக்குதல் மதச்சார்பின்மைக்கு எதிரான சிந்தனையை காட்டுகிறது. இந்திய சகோதரத்துவத்துக்கு எதிரான செயல் இதுவாகும். 

தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பதற்கு பதிலாக இறைச்சி துண்டுகள் குறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் போல உத்தரபிரதேச அரசு நடத்துகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும், இவ்விவகாரத்தில் அமைதி காத்துவரும் பிரதமர் மோடியை விமர்சித்த ஓவைசி, பன்மைத்துவத்தில் நம்பிக்கையும் சட்டத்தை நிலைநிறுத்தவும்  பிரதமர் மோடி டுவிட்டர் மூலமாவது ஒரு  இரங்கல் செய்தியை வெளியிட்டிருக்க வேண்டும் என்றார். 

2 comments:

  1. This is very bad human rights violation. But Mr.Narenthira Modi will not take any decision against this crime. Insaallah Islam will take power in India.

    ReplyDelete
  2. India nalla padam perum very soon Muslim porumai vedikkum

    ReplyDelete

Powered by Blogger.