பாலமுனை வைத்தியசாலை, கடமையில் இல்லாத வைத்தியர்கள் பிடிபட்டனர்

அம்பாறை - பாலமுனை லைத்தியசாலைக்கு பிரதியமைச்சர் பைசால் காசீம் தலைமையில் சுகாதார அமைச்சின்உயர்மட்ட குழுவினர் இன்று சனிக்கிழமை 10 ஆம் திகதி திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.
அச்சமயம் குறித்த வைத்தியசாலையில் எந்தவொரு லைத்தியரும் கடமையில் இல்லாததையிட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைப்பெற வந்திருந்த நோயாளிகளும் சமகாலத்தில் இதுகுறித்து பிரதிமைச்சர் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர்மட்ட குழுவினரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து குறித்து வைத்தியசாலையில் கடமை நேரத்தில் வைத்தியர்கள் இல்லாத விவகாரம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Post a Comment