Header Ads



கரைபுரண்டோடும் கங்கைகள், தெற்கு அதிவேக வீதியும் மூழ்கியது

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக நில்வளா, களு, கிங் கங்கைகள் கரைபுரண்டு ஓடுவதாக நிர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று இரவு தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய நிலைமை தோற்றும் என அந்த திணைக்களத்தின் நீர்கட்டுப்பாட்டு பணிப்பாளர் பிரேமா ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்தார்.

மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்துள்ள நிலையில், காலி, மாத்தறை, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தாழ் நிலங்களும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பிட்டிகல - அல்பிட்டிய வீதியில் 15 வது மைல்கல் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியின் குறுந்துகங்கவிலிருந்து வெலிபென்ன வரையான வீதியில் உள்ள கிளை வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்தநிலையில், இன்று பிற்பகல் பன்னிபிட்டிய பிரதேசத்தை கடந்து சென்ற கடும் காற்று காரணமாக 15 வீடுகள் வரை  பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதனிடையே, அசாதாரண காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு அனர்த்த பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கேகாலை, ரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.