Header Ads



இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில், ரணில் தெரிவித்தவை


நாட்டில் உள்ள நெருக்கடிகளை களைவதற்கு தேசிய பொறிமுறையினுள் இயங்கும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அலரிமாளிகையில் இன்று (27) மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.

சாதாரண பொதுமகன் ஒருவரை தலைமையாக கொண்ட குழுவொன்றை அமைத்து அதற்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை இந்து, முஸ்லிம் மதத் தலைவர்கள், மகாநாயக்கர்கள், வணக்கத்திற்குரிய காடினல், ஆகியோரை கொண்ட ஆன்மீக குழுவினால் முன்னெடுக்கப்படும்.

இதுதவிர, காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கான காரியாலயம் மற்றும் கடந்த கால சம்பவங்களை ஆராய்வதற்கான விசேட சட்டங்கள் பற்றிய காரியாலயம் ஒன்றையும் உள்நாட்டில் ஸ்தாப்பிதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சட்டங்கள் பற்றிய காரியாலயத்திற்காக தேசிய சட்டத்தரணிகள் நியமிக்கப்படும் அதேவேளை, தேவையேற்படின் வெளிநாட்டு ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் இன்றைய ஊடக பிரதானிகளின் சந்திப்பில் தெரிவித்தார்.

வெளிநாட்டு சட்டவல்லுனர்கள் இந்த சட்ட காரியாலயத்தினுள் இணைக்கப்படுவார்களாயின் உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.