பொத்துவில் வைத்தியசாலைக்கு, 60 மில்லியன் - பைசால் காசீம்
-மு.இ.உமர் அலி-
சுகாதார ,போசாக்கு மற்றும்சுதேச வைத்தியத்துறை அமைச்சர் பைசால் காசீமின் வேண்டுகோளிற்கு இணங்க இன்று ஞாயிற்றுக்கிழமை (27/9/2015) காலை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மகீபால உட்பட உயர் அதிகாரிகள் சிலர் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்தனர்.
பிரதி அமைச்சரின் முன்னிலையில் வைத்தியசாலையின் உடனடி,நீண்ட கால தேவைகள் குறித்து ஆராயப்பட்டது.
அவசர சிகிச்சைப்பிரிவின் உபகரணங்கள் கொள்வனவிற்கும் ,வைத்தியர்கள் தாதியர்களது தங்குமிடம் போன்ற பிரச்சனைகளை உடனடியாக தீர்த்துவைப்பதற்காக ஐந்து மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு ,எதிர்வரும் வருடம் மேலதிகமாக வைத்தியர்களையும், போதியளவு தாதியர்களையும் வழங்குவதாக பணிப்பாளர் நாயகம் வாக்களித்தார்.
மிக விரைவில் புதியதோர் பற்சிகிச்சைக்கான நாற்காலியும் (Dental Chair) வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக கூறினார்.
எதிர்வரும் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட நிதியில் ரூபா 60 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதியமைச்சர் கருத்துத்தெரிவித்தார்.
பொத்துவில் வைத்தியசாலையின் மூலம் மக்கள் உயரிய சேவையை பெற வேண்டும் என பிரதியமைச்சர் நீண்ட நாட்களாக முயற்சிசெய்வது குறிப்பிடத்தக்கது.


Post a Comment