Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளின், ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்ற சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக, தியாகச் சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதிபூணுவோமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஈதுல் அழஹா' தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரிமிக்க சமூகமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இஸ்லாம் மார்க்கம் மனித சமூகத்தின் விமோசனத்திற்கும்,உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் படியும் எமக்கு போதித்துவருவவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்றைய தியாமிகு திருநாளில் நாம் விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்படும் வகையில் எமது வாழ்வின் பணிகளை அமைத்துக்கொள்ளுமாறு பெருநாள் வாழத்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய வரலாற்றில் இப்றாஹீம் நபியின் தியாகத்தை படிப்பினையாகத் தந்த திருநாளாம்  புனித ஹஜ் பெருநாள் தினத்தில் ஒற்றுமையுடனும், தியாகத்துடனும் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இம்முறை எமது நாட்டிலிருந்தும் முழுவுலகிலிருந்தும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஹாஜிகளின் நோக்கத்தை இறைவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இச்சந்தரப்பத்தில் பிராத்திப்பதாக சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய பிரதியமைச்சர் பைசல் காசிம் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் உயர்ச்சி பெற நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக என ஐக்கிய மக்கள் சுதந்திர் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும்,மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக முஸ்லிம்கள் அனைவரும் இன்று தியாகத்திருநாள் ஹஜ்ஜுப்பெருநாளை   கொண்டாடுகின்றனர். அவர்கள் வாழுகின்ற இடங்களிலெல்லாம் நிம்மதியோடு வாழ பிரார்த்திக்கின்றேன்.  குறைகள் நீங்கி  பெரு வாழ்வும்   பிரார்த்திக்கின்றேன் தேசிய  காங்கிரஸின்  தலைவரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ்  ஏ .எல் .எம். அதாஉல்லா தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.