மைத்திரி + ரணில் ஆகியோர் முஸ்லிம்களுக்கு தெரிவித்துள்ள, ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
ஐக்கிய உணர்வுகள் மேலெழுந்து ஒரே திசையை நோக்கி, இறைவனை அடிபணியும் ஹஜ் யாத்திரை மனிகுல ஐக்கியத்திற்கான வெளிப்படை சாட்சியாகுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உலகில் வாழும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க
தன்னலம் பேராசைகளில் இருந்து விடுபட்டு ஏழை எளியோருக்கு வாரி வழங்கி சமூகத்தின் உயர்வு தாழ்வுகளை போக்க அனைவரும் முன்வர வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Post a Comment