Header Ads



ஜேர்மனியில் குடியேற காத்திருப்பவர்கள், இஸ்லாத்தை அடகுவைக்க வேண்டுமா..?


ஜேர்மனியில் புகலிடம் கோரி வரும் புலம்பெயந்தர்களுக்கு 4 கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த ஆளுங்கட்சி அரசியல்வாதியுடன் கை குலுக்க இஸ்லாமிய மதகுரு ஒருவர் மறுத்துள்ளார்.

ஜேர்மனியின் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலின் கிறித்துவ குடியரசு ஒன்றியக்கட்சியில் ஜுலியா கிலாக்னர் என்பவர் மூத்த உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

ஜேர்மனி நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ஜுலியா அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது, ஜேர்மனி வரலாற்றில் இதுவரை காணாத வகையில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் புலம்பெயர்வாளர்கள் இந்த வருடம் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவர்களில் புகலிடம் பெற்று ஜேர்மனியில் குடியேறும் அகதிகள் 4 முக்கிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

முதலாவதாக, இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஜேர்மனியில் குடியேறியுள்ள ஆண்கள் மற்றும் சிறுவர்கள் ஜேர்மனியில் உள்ள பெண்களுடன் சரிசமமாக பழக வேண்டும்.

இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் மூத்தவர், இளையவர் என்ற பாகுப்பாட்டிற்கு இங்கு இடமில்லை.

இரண்டாவதாக, ஜேர்மனியில் குடியேறும் வெளிநாட்டினர்கள் கட்டாயமாக இந்நாட்டு அரசியலமைப்பு சட்டங்களுக்கு விசுவாசமாக செயல்பட வேண்டும். இந்நாட்டில் பின்பற்றப்படும் மதத்தை முக்கியமானதாக கருத வேண்டும்.

குறிப்பாக, ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியை மீண்டும் உருவாக்குவதை தடுக்கும் விதத்தில் கடந்த 1949ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய மற்றும் அடிப்படை சட்டங்களை பின்பற்ற வேண்டும்.

மூன்றாவதாக, ஜேர்மனியில் அளிக்கப்படும் மொழி வகுப்புகளை வெளிநாட்டினர்கள் உறுதியான குறிக்கோளுடன் ஏற்க வேண்டும். திறமையாக ஜேர்மன் மொழி பேசுபவர்கள் மட்டுமே இந்நாட்டு குடிமக்களுடன் எளிமையாக பழக முடியும்.

இறுதியாக, மேலே குறிப்பிட்ட 3 கட்டுப்பாடுகளையும் உறுதியான மனதுடன் பின்பற்றவில்லை என்றால், புலம்பெயர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் நிதியுதவியை ரத்து செய்வதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என ஜூலியா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜுலியாவின் இந்த கடுமையான கட்டுப்பாடுகளால் பல இஸ்லாமிய மதகுருக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அண்மையில் Idar-Oberstein என்ற பகுதிக்கு ஜூலியா சென்றபோது அங்கு இஸ்லாமிய மதகுருவிடம் கை குலுக்க முயன்றுள்ளார்.

ஆனால், ஜூலியாவின் அனுகுமுறைகளால் அதிருப்தி அடைந்த அவர் ஜூலியாவிடம் மரியாதை நிமித்தமாக கூட கை குலுக்காமல் அங்கிருந்து விலகி சென்றது பத்திரிகை செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. As much as we love our country , and culture. Germans love their country,and want to preserve their way of life. We have to appreciate Germans accepting so many refugees when Muslim countries just watching silently.

    ReplyDelete
  2. How to follow this rules

    ReplyDelete
  3. Ivargal valavai illamal poha villain 20 lachathoku adigam koduthu pogirargal luxsary life vala pogiraargal madam maarugirargal

    ReplyDelete

Powered by Blogger.