கிரிக்கெட் போட்டியில் குழப்பம் - 15 வயது சிறுவன் தூக்கிலிடப்பட்டார்
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி ஒன்று தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த கொலையில், கொலையுண்டவரின் பக்கத்து வீட்டுக்காரரான அன்சார் இக்பால் என்பவரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அன்சார் இக்பாலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மரண தண்டனை, அந்த நாட்டின் சுப்ரீம்கோர்ட்டால் உறுதியும் செய்யப்பட்டது.
அன்சார் இக்பால், ‘நான் இந்த கொலையில் ஈடுபடவில்லை. கொலை நடந்ததாக கூறப்படுகிற காலக்கட்டத்தில் நான் 15 வயது சிறுவன். இந்த கொலையில் போலீசார் என்னை தவறாக சேர்த்து விட்டனர்’ என கூறி, சட்டப்போராட்டங்கள் நடத்திப்பார்த்தார். வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில், சர்கோதா நகரில் உள்ள சிறையில் அதிகாலை அவர் தூக்கில் போடப்பட்டார். அவரது உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு குற்ற சம்பவத்தில் கைதான நபர் இளங்குற்றவாளி என்கிறபோது, அவரை தூக்கில்போட பாகிஸ்தானிய சட்டம், அனுமதிப்பதில்லை.
இந்த வழக்கை பொறுத்தமட்டில், அன்சார் இக்பால், சம்பவத்தின்போது 15 வயது சிறுவன் என்பதற்கான பள்ளி சான்றிதழ்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால், அவற்றை நீதிமன்றம் பரிசீலிக்காமல் விட்டு விட்டது என கூறப்படுகிறது.

Post a Comment