Header Ads



ஆட்டை கைது செய்த பொலிஸார்


கனடா நாட்டில் உள்ள உணவகத்திற்குள் புகுந்த ஆடு ஒன்று ஊழியர்களின் பிடியில் சிக்காமல் நீண்ட நேரமாக சேட்டை செய்து வந்ததால் பொலிசார் அதனை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

Saskatchewan மாகாணத்திற்கு உட்பட்ட வார்மன் நகரில் Tim Hortons என்ற உணவகம் அமைந்துள்ளது.

இந்த உணவகத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை காலை வேளையில் ஒரு கருப்பு ஆடு புகுந்துள்ளது.

ஆடு உள்ளே புகுந்ததால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் அதனை வெளியேற்றுமாறு ஊழியர்களிடம் புகார் கூறியுள்ளனர்.

ஆனால், ஊழியர்கள் பல முறை முயன்றும் அந்த ஆட்டை வெளியேற்ற முடியவில்லை. தானியங்கி கதவிற்கு அருகில் செல்வதும் பின்னர் அங்கிருந்து உணவகத்திற்குள் மீண்டும் புகுந்துக்கொள்வதுமாக சேட்டைகள் செய்து வந்துள்ளது.

இறுதியாக, நீண்ட நேரத்திற்கு பிறகு அங்குள்ள கதவிற்கு அருகில் ஆடு படுத்து உறங்க தொடங்கியுள்ளது.

ஆட்டை வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைந்த ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு உணவகத்திற்கு வந்த 2 பொலிசார், ஆட்டை கைது செய்து அவர்கள் வந்த பொலிஸ் வாகனத்தில் கொண்டு சென்றனர்.

பின்னர், அப்பகுதியில் உள்ள பல ஆட்டு பண்ணைகளில் விசாரணை செய்தபோதும் கைது செய்யப்பட்டுள்ள ஆட்டின் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இரவு நேரம் என்பதால் ஆட்டை காவல் நிலையத்தில் வைக்க முடியாத காரணத்தினால் அருகில் உள்ள ஒரு கால்நடை மருத்துவமனையில் ஆட்டை தங்க வைத்தனர்.

பொலிசார் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பை தொடர்ந்து ஆட்டின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் பொலிசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.

No comments

Powered by Blogger.