அமைச்சு பதவியையும், தேசிய அரசாங்கத்தையும் நான் விரும்பவில்லை - நிமால் சிறிபால
தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவை தான் ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளை தபால் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சு சிறப்புரிமைகளை அனுபவிக்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள போவதில்லை. தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவுக்கு நான் ஆரம்பத்தில் இருந்தே இணங்கவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது தலைமையில் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதுளையில் இருப்பதா அல்லது தேசிய அரசாங்கத்தில் இணைந்து கட்சியினரையும் கட்சியையும் வலுப்படுத்துவதா என்ற இரண்டு மாற்று வழிகள் இருந்தன.
இதில் நான் இரண்டாவதை தெரிவு செய்து கொண்டேன். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு கட்சியினருக்கும் கட்சிக்கும் எப்போதும் எதனையும் செய்ய முடியாது. அரசியல் குறித்து எமக்கு வெறுப்பு ஏற்படலாம். இது இயற்கை.
இதன் போது அரசியலில் தவறான இடங்களும் உள்ளன. கட்சியினர் தவறும் இடங்களும் உள்ளன. இதில் நாங்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். தவறிய இடம் குறித்து நாம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
அமைச்சராக இருந்து, கட்சி பேதமின்றி, தொழிற்சங்க பேதமின்றி நான் செயற்படுவேன். ஆனால், வெளியில் நான் எனது அரசியலை மேற்கொள்வேன். அந்த இடத்தில் நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினராக செயற்படுவோம் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாs

Hiiiiiiiiiiiiiii.sleepy person.better to go home
ReplyDelete