"டவுன் சிண்ட்ரோம் பெண்"
தமது குறைகளை எண்ணி, எண்ணி வருத்தப்படும் பலருக்கு மத்தியில், குறைகளையே தனக்கு சாதகமாக்கிக் கொண்ட டவுன் சிண்ட்ரோம் பெண் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மரபணுக் கோளாரால் ஏற்படும் ‘டவுன் சிண்ட்ரோம்’ நோயுடன் பிறந்த, எம்மா லினாம்(21), என்பவருக்கு, ஆட்டிசம் நோயின் தாக்கமும் இருந்தது. தனது நோயால், எழுதப் படிக்க முடியாத நிலையில் உள்ள எம்மா தற்போது தனக்கு விருப்பமான வேலையை தொழிலாகவும் செய்து வருகின்றார்.
பள்ளிப் பருவம் முதலே, அலுவலகப் பணிக்கான பயிற்சி என வரும்போது, எம்மா, அலுவலகங்களின் முக்கியமான ஆவணங்களை, துண்டு துண்டாய் கிழிக்கும் ஷ்ரெட்டிங் செய்யும் சாதனத்தில் அமர்ந்து பணி புரிய முற்படவே அதிகம் விரும்புவார்.
பொதுவாக அரசு அலுவலகங்கள் உட்பட பெரிய நிறுவனங்கள் பல, தமது நிறுவனம் பற்றிய ரகசியங்கள் வெளியில் கசிவதைத் தடுக்க அவற்றை முற்றிலும் அழிப்பதற்காக, இந்த ஷ்ரெட்டிங் சாதனத்தை பயன்படுத்துவர்.
ஒரு கட்டத்தில், அவளது எந்த திறமையின் வழியே அவளது வாழ்க்கை, பயணிக்க வேண்டும் என யோசித்தபோது, முக்கிய ஆவணங்களை அழிக்கும் பணியில் இறங்க எம்மாவின் அம்மா அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, மாஸ்டர் ஷ்ரெட்டர் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி தற்போது நான்கு நிறுவனங்களின், ஆவணங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் எம்மா. இதன்மூலம், எழுத, படிக்க முடியாத தனது குறை, எம்மாவின் தொழிலுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில், ஆவணங்களின் ரகசியம் வெளியேற எம்மா காரணமாக மாட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

விடா முயற்சியே வெற்றிக்கு காரணம்.மனிதனால் முடியாது என்று ஓன்று இல்லை தன்னால் இயன்றதை முயற்சியுடன் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை நிருபித்து காட்டயுள்ளார் இவர்.முயற்சியுடையார் இகட்சியடையார்.பிறர் தரும் ஆயிரம் ரூபாயை விட தான் சம்பாரித்த பத்து ரூபா மேலானது சந்தொசமளிக்க கூடியது.மார்க்கட்டில் பல வகையான பலன்களை நாம் வாங்குவோம் ஆனால் நம் வீட்டு தோட்டத்தில் பரித்தடுக்கும் ஒரு பழத்தைப்பார்த்து நாம் படும் சந்தோசம் என்னில் அடங்காதவை. ஆயிரம் பெச்சுத்திரமையாலர்களின் பேச்சை கேட்போம் சந்தோசம் இருக்காது ஆனால் நம் பிஞ்சு மழலை வழங்காத ஒரு மொழியில் பேசும் அதன் தாக்கம் இந்த உலகத்தைவிட பெரியது.
ReplyDelete