Header Ads



சவூதி அரேபியாவை குறை கூறலாமா...?

-M.JAWFER. JP-

அஸ்ஸலாமுஅலைக்கும்...

இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் மிகப்பெருமதி வாய்ந்த ஹஜ் செய்வதற்காக புனித மக்கா நோக்கி பிரயாணம் மேற்கொள்கிரார்கள்.சிற்சில வருடங்களில் சில ஆபத்தான விடயங்கள் ஏற்பட்டு பல மரணங்கள் ஏற்பட்டு வருகிறது.இது வல்ல அல்லாஹ் வின் விதியில் எழுதப்பட்ட முடிவாக உள்ளது என்பதுதான் நம் முஸ்லிம்களின் ஈமானிய நம்பிக்கையாக உள்ளது.

இதில் யாரும் யாரையும் பொதுவாக சவுதி அரசை குறை கூறுவது வழக்கமாக உள்ள விடயமாக உள்ளது. இதில் உலகில் உள்ள மனித உரிமை அமைப்புகள் மேற்கெத்திய  நாடுகளின் முஸ்லிம்களினதும் முஸ்லிம் நாடுகளினதும் குறைகாணும் நோக்கோடு பார்க்கும் திறமைகளை காட்ட ஆரம்பிப்பார்கள்,என்பது உறுதி.இந்த சந்தர்ப்பத்தில் நம் இளம் சமுதாயத்தார்கள். இந்த மேற்க்கத்திய முதலைக்கண்ணீர் வடிக்கும் சூட்சிகளுக்கு அடிபணிந்து கண்ட கண்ட மாதிரியல்லாம் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் சவுதி அரசையும் அங்குள்ள அதிகாரிகளையும் குறை கூற ஆரம்பிப்பார்கள்.

 நாம் ஒன்றை புரிந்துகொள்ளா வேண்டும்.நம் ஈமானின் அத்தியாயமான விதியில் இருந்து வழிதவறிவிடக்கூடாது. எது நடந்தாலும் அல்லாஹ்வின் ஏற்பாட்டில்தால் நடக்கிறது.நம்மை விட இந்த மரணமடைந்த ஹஜ்ஜாஜிகள மீது வல்ல அல்லாஹ் மிகவும் இரக்கமுடையவன்.இவர்கள் இவ்விடத்தில் மரணித்து சொர்க்கம் போக அல்லாஹ் விரும்பும்போது நம் யாராலும் அதை தடுக்க முடியாது.

இஹ்ராமுடன் மரணமடைவோரை இஹ்ராமுடன் அடக்கம் செய்யுமாறும். கியாமத்து நாளில் இஹ்ராமுடன் தக்பீர் சொன்னவர்களாக எழுப்பப்படுவார்கள் என்றும் நபி ஸல் )அவர்கள் சொல்லியுள்ளார்கள் .இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும். ஆகவே இணையத்தில் கருத்து வெளியிடும் சகோதரர்கள் மிகவும் கவனமாக கருத்துக்களை பதிவு செய்து நம் ஈமானை பாது காத்துக்கொள்ள முயல வேண்டும்.இதுவெல்லாம் அல்லாஹ்வுடைய கடமை சம்மந்தமான விடயங்கள் நாம் மிகக்கவனமாக கையாள வேண்டியுள்ளது.

25 comments:

  1. MASHA ALLAH ITS 100 percent true.very lucky people infront of islam

    ReplyDelete
  2. What Jawfer JP says is gem of truth .
    No need for unnecessary comments.
    Lets do our role making Dua for the Shaheeds.

    ReplyDelete
  3. சப்பைக் கட்டுக் கட்ட வேண்டாம்.
    எல்லாவற்றையும் அல்லாஹ்வின் மீது போடுவதாக இருந்தால், விதியை விதி என்று சொல்லிவிட்டால், மகிந்த ராஜபக்ச, கோத்தபாய மீது கூட குற்றம் சொல்லக் கூடாது, அளுத்கமை கலவரம் பற்றிக் கூட விசாரணை, நீதி எல்லாம் கேட்கக் கூடாது என்றா சொல்லப் போகின்றீர்கள்?

    சவுதியை காப்பாற்ற, விதி என்ற சாட்டில் அல்லாஹ்வைக் குறை சொல்ல சொல்கின்றீர்களா?

    அங்கே மரணமடைந்த எல்லோரும் இஹ்ராமுடன் இருக்கவில்லை, பணியாளர்கள் இஹ்ராமுடன் இருக்கவில்லை, ஊழியர்கள் இஹ்ராமுடன் இருக்கவில்லை. உங்கள் தலையில் உடைந்து விழாத வரை இப்படி எதையாவது பேசி வக்காலத்து வாங்குவது ஒன்றும் சிரமம் இல்லை.

    ReplyDelete
  4. Masha Allah every thing from Allah

    ReplyDelete
  5. Innallilahi wahinaelaaihi rajahoon.ALLAHU AkBAR.all of fisafeelillah .inshahallah granted jannethaul firthouws all hajis .aameen .

    ReplyDelete
  6. Innallilahi wahinaelaaihi rajahoon.ALLAHU AkBAR.all of fisafeelillah .inshahallah granted jannethaul firthouws all hajis .aameen .

    ReplyDelete
  7. Yes it is the fault of the Saudi government. They should be more cautious in their construction work. We cannot ignore accidents as fate. If that is the case it should be applied everywhere.

    ReplyDelete
  8. This is how we Muslim to beleive in the issue of KADAR ( Aqeeda )

    ReplyDelete
  9. நி்ச்சியமாக குறைகூற வேண்டும். சனநெரிசல் உள்ள இடத்தில் புயல்காற்றும் மழையும் தொடர்ந்தால் அந்த பார இயந்திரங்களினால் மனித உயிருக்கு ஆபத்தாகும் என இரு வாரங்களுக்கு முன்பு அந்த நாட்டின் என்ஜினியர்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா். சவூதி அரசாங்கம் அதை பொருட்படுத்தவில்லை. எனவே உயிரிழந்து சஹீதான அனைத்து ஹாஜிகளின் நாடுகளும் சவூதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து உரிய நட்டஈட்டைப் பெற முயற்சி செய்யவேண்டும். இலங்கையர்கள் யாரும் இருந்தால் உடனடியாக அரசாங்கம் கவனம் செலுத்தி வழக்குத் தொடர ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  10. For security reason Saudi Arabia should remove early all cranes from MAKKAH but they don’t concern.

    ReplyDelete
  11. For security reason Saudi Arabia should remove early all cranes from MAKKAH but they don’t concern.

    ReplyDelete
  12. For security reason Saudi Arabia should remove early all cranes from MAKKAH but they don’t concern.

    ReplyDelete
  13. Lucky people ???? Cover Saudi government ignorance .

    ReplyDelete
  14. For security reason Saudi Arabia should remove early all cranes from Mecca but they don’t concern.

    ReplyDelete
  15. சிறு திருத்தம்
    தக்பீர் சொல்லியவராக அல்ல,. லப்பைக் சொல்லியவராக

    ReplyDelete
  16. maranaththai virumpathawarhalukkum, suwarkkam thodarfil nampikkai kurainthawarhalukkum ithu maferum thawarahatthan theriyum. mattappadi nam maraniththawarhalin marumai eedaettathukkaha thua seivathae emathu kadamai.

    ReplyDelete
  17. எப்படி மார்க்கத்தையும் அல்லாஹ்வையும் வைத்து விளையாடுகின்றார்கள், சவூதி அரசை காப்பாற்றுவதற்காக?

    இப்படி பகிரங்கமாக, அறிவிற்குப் பொருத்தமில்லாமல், குர்ஆன் வசனங்களை வளைத்து பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி எழுதினால், இதில் உள்ள கெட்ட நோக்கத்தை சாதாரண வாசகர்களுக்கு புரிந்துகொள்ள முடியும்.

    ReplyDelete
  18. கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் ஹஜ்ஜுக்குச் சென்றவர்களைக் கேட்டுப் பாருங்கள், ஒரு உண்மையை அறிந்துகொள்ளலாம்.

    எப்பொழுது பார்த்தாலும் கஹ்பாவிலும், மதீனாவிலும் புனரமைப்புப் பணிகள் முடிவில்லாமல் நடப்பதன் மர்மம் என்ன? உலகின் எத்தனையோ கட்டட, நகர நிர்மாணங்கள் அடுத்த நூறு வருடங்களுக்கு என்று திட்டமிடப்பட்டு முடிக்கப் படுகின்றன. அவை அதே ஒழுங்கில் இயங்குகின்றன.

    அடுத்த ஐம்பது வருடங்களுக்கு எத்தனை ஹாஜிகள் வருவார்க என்கின்ற அண்ணளவான எண்ணிக்கையை வைத்து மக்கா, மதீனாவின் புனரமைப்பை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு சவுதிக்கு அறிவில்லையா?

    ReplyDelete
  19. Yaseer Sameen & La Voix im agree with you both.

    ReplyDelete
  20. கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் ஹஜ்ஜுக்குச் சென்றவர்களைக் கேட்டுப் பாருங்கள், ஒரு உண்மையை அறிந்துகொள்ளலாம்.

    எப்பொழுது பார்த்தாலும் கஹ்பாவிலும், மதீனாவிலும் புனரமைப்புப் பணிகள் முடிவில்லாமல் நடப்பதன் மர்மம் என்ன? உலகின் எத்தனையோ கட்டட, நகர நிர்மாணங்கள் அடுத்த நூறு வருடங்களுக்கு என்று திட்டமிடப்பட்டு முடிக்கப் படுகின்றன. அவை அதே ஒழுங்கில் இயங்குகின்றன.

    அடுத்த ஐம்பது வருடங்களுக்கு எத்தனை ஹாஜிகள் வருவார்க என்கின்ற அண்ணளவான எண்ணிக்கையை வைத்து மக்கா, மதீனாவின் புனரமைப்பை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு சவுதிக்கு அறிவில்லையா?
    _lavoix_

    ReplyDelete
  21. உலகத்திலேயே அதிக சனத்தொகை கொண்ட மதம் கிறிஸ்தவம், அவர்களின் புனிதத் தளமான வத்திக்கானில் வருடம் முழுவதும் கட்டிட வேலை நடப்பதில்லை.

    சவூதியில் நடக்கும் இந்த விளையாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.