Header Ads



பாடசாலை மாணவி பஸ்ஸில் தூங்கும்போது, செல்பி எடுத்தவருக்கு அடி உதை

பஸ்ஸின் பக்கத்து ஆசனத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியொருவரின் முகம் தெரியும் வகையில் தன்னுடன் இணைத்து செல்பி எடுக்க முயன்ற இளைஞன் ஒருவன் வசமாக மாட்டிக்கொண்டுள்ளான்.

காலி அருகே பெந்தோட்டைப் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பாடசாலை பஸ் ஒன்றில் அமர்ந்திருந்த மாணவியொருவர் தன்னையறியாமல் சீட்டில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்ட அவருக்கு அருகில் அமர்ந்திருந்த வாலிபன் பல தடவைகள் தனது கமெரா போனை முன்னால் நீட்டி செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார்.

வேறு சில மாணவிகள் இளைஞனின் நடத்தை குறித்து சந்தேகத்துடன் அவனின் செயற்பாடுகளை தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவன் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியின் முகத்துடன் தன் முகம் ஒட்டியிருக்கும் வண்ணமாக நெருங்கி செல்பியொன்றை எடுத்துள்ளார்.

இதனைக் கண்ட ஏனைய மாணவிகள் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.  இதனையடுத்து குறித்த வாலிபன் திடீரென்று பஸ்சை விட்டிறங்கி தப்பித்துக் கொள்ள முயன்ற போதும் ஏனைய மாணவிகள் அதற்கு இடமளிக்காமல் மொபைல் போனில் எடுத்த செல்பியை அழிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இதற்குள் தூங்கிக் கொண்டிருந்த மாணவியும் எழுந்து விடயமறிந்து கூச்சல் போட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் மாணவிகளின் உதவிக்கு வந்த வேறு இளைஞர்களிடமிருந்து செல்பி எடுத்த இளைஞனுக்கு அடி. உதை கிடைத்துள்ளது.

தப்பிக்க வேறு வழியின்றி குறித்த இளைஞன் செல்பியை அழித்துவிட்டு பஸ்சை விட்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்ற ரீதியில் ஓடித் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.