கோத்தபாயவின் ரக்னா லங்காவுக்கு, மைத்திரி காட்டிய பச்சைக்கொடி
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவை நிறுவனம் தொடர்ந்து செயற்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாரத்ன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
பாரிய முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் சாட்சியமளித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாரத்தின ஹெட்டியாரச்சி, ரக்னா லங்கா நிறுவனம் மூலமாக அரசாங்கத்துக்கு பாரிய வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக ரக்னா லங்கா நிறுவனத்தில் உள்ள சிற்சிறு குறைபாடுகளைக் களைந்து அதனை ஒரு வர்த்தக நிறுவனமாக நடத்திச் செல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் ரக்னா லங்கா நிறுவனத்தின் இணை நிறுவனமான எவண்ட் கார்ட் நிறுவனம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அமைச்சரவையின் அனுமதி இன்றித் துவங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் சட்டவிரோத ஆயுதங்களுடன் மிதக்கும் ஆயுதக்களஞ்சியமொன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment