Header Ads



ஹஜ் பெருநாள் பலகாரம் தொண்டையில் சிக்கியே, றிசாத் பதியுதீனின் மருமகள் வபாத்

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீனின் மருமகள், பலகாரம் தொண்டையில் அடைத்து பரிதாபமாக மரணித்துள்ளார்.

ஹஜ்ஜி பெருநாளை முன்னிட்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட பலகாரத்தை உட்கொண்ட சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளார்.

பதினைந்து வயதான பாத்திமா அல்தா என்ற சிறுமியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் புத்தளம் நில்தடிய ரத்மல்யாய முஸ்லிம் வித்தியாலய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிறுமி அமைச்சர் ரிசாட்டின், சகோதரியின் மகள் ஆவார்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் புத்தளம் வைத்தியசாலையில் குழுமியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரவு இரண்டு பலகாரங்களை உண்ட சிறுமிக்கு இறுமல் ஏற்பட்டதாகவும் பின்னர் பலகாரம் தொண்டையில் அடைத்து மூச்சுத் திணறியதாகவும் சிறுமியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. இது மிகவும் துரதிஷ்டவசமானது.

    இளம் பெண்ணின் பெற்றோருக்கும் அமைச்சர் உட்பட சகல உறவினர்களுக்கும் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனோபலம் கிடைக்கட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.