Header Ads



யாழ்ப்பாணத்தில் ஹஜ், பெருநாள் தொழுகை (படங்கள்)

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்கள் இன்று ல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய தகவல் வழிகாட்டல் மையம் ஏற்பாடு செய்த தௌஹீத் ஜமாத் அமைப்பினரின் பெருநாள் தொழுகை திறந்த வெளியரங்கு உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.

இதன் போது மார்க்க சொற்பொழிவு மற்றும் தொழுகை   மௌலவி பைசர் மதனி தலைமையில்  மேற்கொண்டதுடன் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

அடுத்து யாழ் கிளிநொச்சி உலமா சபை தலைவர் மௌலவி அஸீஸ் காசிமி தலைமையில் மற்றுமொரு பெருநாள் தொழுகை  காலை 7 மணியளவில் ஆரம்பமானது.

இத்தொழுகை ஒஸ்மானியா ஜின்னா மைதானத்தில் நடைபெற்றபோது மார்க்க சொற்பொழிவினை மௌலவி எம்.ஐ மஹ்மூத் பலாஹி மேற்கொண்டார். இதன்போது நூற்றுக்கணக்கான  மக்கள் கலந்து கொண்டனர்.

 அத்துடன் ஹஜ் பெருநாள் தொழுகையின் போது நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் மக்கள் சுபீட்சமடைய வேண்டீயம் பிரார்த்திக் கொண்டனா். ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.








No comments

Powered by Blogger.