கொழும்பு, கம்பஹா மக்களுக்கு பேராபத்து - நீரில் நச்சுப்பொருட்கள்
களனி ஆற்று நீரில் ஆசனிக் மற்றும் மெதலின் கலந்துள்ளதாகவும் இது மனித உடலுக்குத் தீங்கினை ஏற்படுத்தக் கூடியவையெனவும் ஆனால் இது குறித்து அரசாங்கமோ , நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையோ அல்லது மத்திய சூழல் அதிகார சபையோ எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையெனவும் முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அடுத்த வாரமளவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

Post a Comment