மரண தண்டனையை மெய்யாகவே, அமுல்படுத்த வேண்டுமென்ற கரிசனை இருந்தால்..!
மரண தண்டனையை அமுல்படுத்த நாடாளுமன்றின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைத்தால் மரண தண்டனையை அமுல்படுத்த முடியும்;.
ஜனாதி;பதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இவ்வாறு தண்டனை விதிக்க முடியும்.
எனினும், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி மிகுந்த ஜனநாயக வழிமுறை ஒன்றை பின்பற்றியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மரண தண்டனையை அமுல்படுத்துவதில்லை என ஜெனீவாவில் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு முழுக்க முழுக்க ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு முரணானது.
ஜனாதிபதி காலியில் தெரிவித்த கருத்தையா அல்லது மங்கள ஜெனீவாவில் வெளியிட்ட கருத்தையா மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை.
மரண தண்டனையை மெய்யாகவே அமுல்படுத்த வேண்டும் என்ற கரிசனை தேசிய அரசாங்கத்திற்கு இருந்தால் அதனை அமுல்படுத்த முடியும் என பிரசன்ன ரணதுங்க சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Post a Comment