கல்வி + உயர் கல்வியமைச்சர்களுக்கு எதிர்ப்பு - மைத்திரிக்கு கடிதம் அனுப்பிவைப்பு
கல்வித்துறைசார் அமைச்சர் நியமனங்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தினர் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கல்வி சார் அமைச்சுக்களுக்கான துறைகள் ஒதுக்கீடு தொடர்பில் திருப்தி அடைய முடியாது என தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக எவ்வித தர்க்க ரீதியான அடிப்படையும் இன்றி துறைகள் பகிரப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பிரிமால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கல்வி மற்றும் பெருந்தெருக்கள் ஆகியனவற்றை இணைத்து ஓர் அமைச்சாக்கப்பட்டுள்ளது.
தனியார் பாடசாலை மற்றும் கல்வி நிறுவன உரிமையாளர் ஒருவர் பல்கலைக்கழக கல்வி ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலைமைகளினால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். குறிப்பிட்ட சிலரின் தேவைகளுக்காக இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு அரச கல்வித்துறையை குறித்த அமைச்சர் எவ்வாறு பாதுகாப்பார் என்பது கேள்விக்குறியேயாகும்.
அரச கல்வித்துறையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு. இந்தக் கடப்பாட்டினை அரசாங்கம் ஒரு போதும் உதாசீனம் செய்துவிடக் கூடாது.
கல்வித்தறையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய ரீதியில் விரிவாக கலந்துரையாடல் நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment